அதிமுக-வின் பொதுச் செயலாளராக பதிவு ஏற்றுள்ள சசிகலாவின், அரசியல் வாழ்க்கை ஜனவரி மாதத்தோடு முடிந்துவிடும், என்று
பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி யுமான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி, கோவையில் நிருபர்களிடம் பேசுகையில், “சசிகலா நடராஜன், அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது அவர்களின் உள்கட்சி விவகாரம். எனினும், அவர் நீண்டகாலம் அரசியலில் ஈடுபட முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் ஜனவரி மாதம் இறுதித் தீர்ப்பு வெளியாகும். அதில் சசிகலா தண்டனை பெறும்பட்சத்தில், அவருடைய அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்துபோகும்” என்று தெரிவித்தார்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||