t> கல்விச்சுடர் பூமியிலிருந்து மனித இனம் அழியும்... எச்சரிக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 December 2016

பூமியிலிருந்து மனித இனம் அழியும்... எச்சரிக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்




பூமியில் மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளம் கூட இல்லாமல் அழிவைச் சந்திக்கும் என்று பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசிய ஹாக்கிங், பூமியில் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே மனித இனத்தால் வாழ முடியும். இந்த கால இடைவெளிக்குள் ஏற்படும் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.


ஐன்ஸ்டீனுக்குப் பிறகு ஐக்யூ எனப்படும் மூளை செயல்பாடு அதிகம் கொண்டவராகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கிங்கிடமிருந்து இப்படி ஒரு எச்சரிக்கை குரல் வந்திருப்பதை உலக விஞ்ஞானிகள் கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேரழிவிலிருந்து மனித இனம் தன்னைக் காத்துக் கொள்வதற்கான ஒரே வழி என்ன என்பதையும் ஹாக்கிங் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

விண்வெளியில் பூமியைப் போன்றே உயிர்வாழ உகந்த சூழல் இருக்கும் கோளினைக் கண்டுபிடிப்பதே மனித இனம் முன் இருக்கும் ஒரே வழி என்று ஹாக்கிங் குறிப்பிட்டார். மனித இனத்தின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக புதிய கோளைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


JOIN KALVICHUDAR CHANNEL