டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அறிவித்தார் அருண் ஜேட்லி
டெல்லி: ரொக்கப் பணமாக இன்றி, டிஜிட்டல் முறையில் (டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஆன்லைன், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை) பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இப்போதுள்ள நிலையில், 58 சதவீத ரயில் பயணிகள் ஆன்லைனில்தான் டிக்கெட் வாங்குகிறார்கள். இனிமேல் ஆன்லைனில் டிக்கெட் எடுத்தால் 10 லட்சம் விபத்து காப்பீடு இலவசமாக வழங்கப்படும்.
ரயில் நிலையத்தின் பிற சேவைகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு 5% தள்ளுபடி தரப்படும்.
புறநகர் ரயில்களுக்கான மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் எடுத்தால், 0.5 சதவீதம் டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.
4 கோடியே 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படும்.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
டோல் கேட்களில் ஆர்எப்ஐடி மற்றும் பாஸ்ட்டேக் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி தரப்படும்.
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில், ஆன்லைன் மூலமாக லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்போருக்கு 8சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில், ஆன்லைன் மூலமாக, ஜெனரல் இன்சூரன்ஸ் எடுப்போருக்கு 10 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும்.
இந்த அறிவிப்புகளில் புறநகர் ரயில் டிக்கெட் தவிர்த்த பிற அறிவிப்புகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வர உள்ளது. புறநகர் ரயில் டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் சலுகை ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
ரொக்கப் பணமற்ற பொருளாதாரத்திற்கு நாட்டை இழுத்துச் செல்வதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||