இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயலுக்கு இங்கு அமைந்துள்ள நாடுகளான இந்தியா, இலங்கை வங்காளதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டுவது வழக்கம். சமீபத்தில் சென்னையை மிரட்டி பின் புஸ்வானமாகிப்போன புயலுக்கு ‘நாடா’ என்ற பெயரை ஓமன் சூட்டியிருந்தது.
இதையடுத்து, தற்போது வங்காள விரிகுடா வழியாக தமிழ்நாடு - ஆந்திரா இடையே இன்று கரையை கடக்கும் புயலுக்கு ‘வார்தா’ என்ற பெயரை பாகிஸ்தான் சூட்டியது. உருது மொழியில் ‘வார்தா’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘சிகப்பு ரோஜா’ என்று பொருள் என தெரியவந்துள்ளது
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||