t> கல்விச்சுடர் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 December 2016

தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : ரெட்டியுடன் தொடர்பா?



சென்னை: தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு ஆளாவது இதுவே முதல் முறையாகும். சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான சேகர் ரெட்டிக்கும், தலைமை செயலர் ராம மோகனராவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சேகர் ரெட்டிக்கு மணல் ஒப்பந்தம் கிடைக்க காரணமாக இருந்தவர் ராம மோகன ராவ். ராம மோக ராவ் தொடர்பால் தான் ரெட்டி உச்சத்துக்கு வர முடிந்ததாக தெரிகிறது.


JOIN KALVICHUDAR CHANNEL