t> கல்விச்சுடர் பூமியை நெருங்கும் சிறுகோள்கள் விஞ்ஞானிகள் எச்சரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 December 2016

பூமியை நெருங்கும் சிறுகோள்கள் விஞ்ஞானிகள் எச்சரிக்கை



பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் சிறுகோள்கள் பூமியை நோக்கி விரைவில் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நாசா மையமானது அவ்வபோது சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய விஷயத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து விஞ்ஞான ஆராய்ச்சியாளர் ஜோசப் நூத் கூறுகையில், பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் சிறுகோள்கள் பூமியை நெருங்கி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இதே போன்று கடந்த 1996 மற்றும் 2014லும் நடந்துள்ளது. ஆனால் அப்போது பெரிதாக தாக்கம் ஏதும் ஏற்படவில்லை.

சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே ஆயிரக்கணக்கில் சிறுகோள்கள் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் சில ஒரு பெரிய மலையளவு கூட இருக்கும், அவை பூமி மீது மோதினால் கற்பனைக்கு எட்டாத அழிவுகள் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த விஷயமானது அடுத்த ஆண்டு 2017ல் ஆரம்பித்து 2113ஆம் வருடத்துக்குள் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதுவதாகவும் ஜோசப் நூத் தெரிவித்துள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL