. -->

Now Online

FLASH NEWS


Showing posts sorted by relevance for query RTI. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query RTI. Sort by date Show all posts

Sunday 14 April 2019

TNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் !!!








மாநில தகுதி தேர்வில் (TNSET-2018) - வரலாறு அன்னை தெரசா பல்கலைக்கழகம் பிழையான மற்றும் தவறான வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி முறைகேடு.பல கட்ட விசாரணைக்கு பின் தப்போது தான் நான் அன்னை தெரசா பல்கலைக்கழக மீது போடப்பட்ட (RTI) தகவல் உரிமை சட்டம் நான் கேட்ட தகவல்களை ஒரு மாத காலக்கெடுவுக்குள் தர வேண்டும் என ஆணைய தீர்ப்பு வந்துள்ளது.



இங்கு கல்வி என்பது வியாபாரமாக்கப்பட்டு தேர்வுகள் முறைகேடு நிறைந்தும் ஓர் கண்துடைப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தேர்வின் வெளிப்படை தன்மை என்பது இங்கு கேள்வி குறையாகவே உள்ளது.
அன்னை தெரேசா பல்கலை கழக மூலம் நடத்தப்பட்ட மாநில தகுதி தேர்வு (TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET – 2018) 04-03-2018 அன்று தமிழ்நாடு மூழுவதும் நடைப்பெற்ற தேர்வில் வரலாறு இரண்டாம் தாளில் வினா உருவாக்கத்தின் ஏற்பட்ட தவறுகள் பிழையான வினாக்கள் என ஐந்து வினாக்கள் தவறாக உள்ளது. இந்த நிர்வாக தவறுகளின் விளைவாக பல தேர்வர்கள் பாதிப்படைந்து உள்ளது. மேலும் இதில் உள்ள தவறான வினாவிற்கு சிலருக்கு மதிப்பெண் வழங்கியும் சிலருக்கு வழங்காமலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த நிர்வாக தவறை தகுந்த ஆதாரத்துடன் வெளிபடுத்தும் நோக்கில் நான் தகவல் அறியும் சட்டத்தில் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன் பல்கலைக்கழக சார்பில் (வினா உருவாக்கத்தின் ஏற்பட்ட தவறுகள் மற்றும் முறைகேடுகளை மறைக்கும் பொருட்டு) முழுமையான தகவல் தர மறுத்து வந்தனர். எனது RTI மாநில தகவல் ஆணையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது. அங்கு இரண்டு முறை விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு ஆஜராக வில்லை நான் கேட்ட தகவல்களும் அளிக்கப்பட்ட வில்லை தப்போது மாநில தகவல் ஆணையத்திடமிருந்து தீர்ப்பு வந்து உள்ளது. மனுதாரர் ஆகிய நான் கேட்ட தகவல்களை தீர்ப்பு பெற்ற(4/4/19) ஒரு மாத காலக்கெடுவுக்குள் தகவல் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வந்து உள்ளது.



ஓர் பல்கலைக்கழக அமைப்பு அதன் கீழ் பல உறுப்பு கல்லூரிகள் என செயல்படும் அரசு கல்வி அமைப்புகள் (அன்னை தெரசாபல்கலைக்கழகம்) பிழையான மற்றும் தவறான வினாக்கள் கொண்ட வினாத்தாள்களை கொண்டு தேர்வு நடத்தி அதற்கு மதிப்பெண் வழங்குகிறது. இதற்கு பொருள் என்ன பல்கலைக்கழகதிற்கு வினாத்தாள் உருவாக்கும் திறன் இல்லையா ? அல்லது. தகுதியற்ற பேராசிரியர்களை கொண்டு வினாத்தாள் உருவாக்கப்பட்டதான் ? தேர்வின் நோக்கம் உண்மை தன்மை என்பது இங்கு கேள்வி குறியாக உள்ளது.
இதனால் பல மாணவர்கள் மற்றும் கல்லுரி பேராசிரியர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்கலைக்கழக கழக நிர்வாகம் தகுந்த பதில் அளித்து தேர்வு குறித்த முழுவிவரம் " வெள்ளை அறிக்கை " தர வேண்டும் என அனைவர் சார்பில் கேட்டுகொள்கிறேன். இந்த விஷயம் குறித்து அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.



குறிப்பு : (இந்த வழக்கு இதுவரை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் விசாரணையில் அதனால் நீதிமன்றத்தில் செல்ல முடியவில்லை. தற்போது தீர்ப்பு வந்துள்ளது.மற்றும் இருக்கும் ஆதாரங்களை கொண்டு தவறான வினாவிற்கு மதிப்பெண் சலுகை அல்லது தவறான வினாவை நீக்கி மறு தேர்வு முடிவு வெளியிட கோர நீதிமன்றத்தை அணுக தற்சமயம் என்னிடம் நிதி வசதி இல்லை எனவே இந்த தகவல்களை இங்கு பதிவு செய்கிறேன். மேலும் பல்கலைக்கழகம் அனுப்பு தகவலையும் பின்பு பதிவு செய்கிறேன். ) {RTI Case No. SA.5991/D/2018

இத்துடன் இது RTI வழக்கு சார்ந்த அனைத்து விவரங்களைக் இணைத்து உள்ளேன் .
 பிழையாக தரப்பட்ட இரண்டு தேர்வு வினாக்கள்
(TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET – 2018) 04-03-2018 அன்று நடந்த தேர்வில் வரலாறு இரண்டாம் தாளில் வினா வகை [ E ] ( PAPER – II (10 – HISTORY) QUESTION SET CODE : E ) வினா வரிசை எண் 69 ,70) நகல்கள்

 தேர்வில் தரப்பட்ட வினாவிற்கு அளிக்கப்பட்ட விடைகள் நான்கும் தவறாக உள்ள வினாக்கள் மூன்று

(TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET – 2018) 04-03-2018 அன்று நடந்த தேர்வில் வரலாறு இரண்டாம் தாளில் வினா வகை [ E ] ( PAPER – II (10 – HISTORY) QUESTION SET CODE : E ) வினா வரிசை எண் 4, 26, 51 ) நகல்கள்

இப்படிக்கு ம.சென்னையன்




Monday 18 January 2021

RTI - CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலை பற்றிய 13 புதிய தகவல்கள் !

RTI - 13.01.2021 நிலவரப்படி CPS வல்லுநர் குழு பற்றிய 13 புதிய தகவல்கள் ! 

தகவல் பகிர்வு : 

அ.சி.ஜெயப்பிரகாஷ்.
 தருமபுரி மாவட்டம்.

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை 119 பக்கங்களை கொண்டது என RTI கடித தகவல்



CPS வல்லுநர் குழு தனது அறிக்கையினை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அய்யா அவர்களிடம் 27.11.2018 அன்று சமர்ப்பித்தது.

மேலும் அந்த அறிக்கையானது மொத்தம் 119 பக்கங்களை கொண்டது என RTIயில் பதில் வழங்கப்பட்டுள்ளது.


   CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம் 22.09.16 அன்று நடந்ததே கடைசியாகும். அதற்கு பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.



அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 30.04.2018 அன்றும், 2006 முதல் இன்று வரை 11 முறை ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.

 மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 4012 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்

 CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.



தமிழக அரசால் இக்குழுவிற்கு ரூ.40,000/- செலவு செய்யப்பட்டுள்ளது என நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.

Monday 3 April 2017

தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:



தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் கோரும்
விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில்
கொள்ள வேண்டியவை:

RTI  FULL DETAILS AND IMPOTANT POINTS:
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்
அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்

குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர்
எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின்
விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற
கேள்வி
5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்
6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/-
செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற
வில்லை எனில்(court fees stamp) மனுவின்
மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)
7.நீதிமன்ற வில்லையை[court fees stamp]
(ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல்
(xerox) எடுத்து வைக்கவும்
8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன்
கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
(மெல் முறையீட்டின் போது ஒப்புதல்
அட்டை முக்கியம்.
தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த
தகவல்கள் கேட்கலாம்?.
( What type questions can be asked in RTI act
2005 )
1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.
( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்
(Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information
stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்
(All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும்
பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and
records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take
Xerox) ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்
முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்
தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த
தகவல் திருப்திகரமாக
இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில்
பிரிவு 19ன் கீழ் உள்ள மேல்
முறையீட்டு அதிகாரியிடம் 30
நாட்களுக்குள் முதல் மேல்
முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில்
திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க
ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல்
ஆணையரிடம் இரண்டாவது மேல்
முறையீடு செய்யலாம்.
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயசாலை,
ஆலையம்மன் கோவில் அருகில் ,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act
தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் &
ஒழுங்கு நடவடிக்கை
பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும்
செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும்
துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக
வேண்டிவரும்

1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம்
வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால்
(30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய
எண்ணத்துடம் மறுத்தால்
4. தவறான, முழுமையுறாத, தவறான
எணத்தை தோற்றுவிக்கும் வகையில்
தகவலை தெரிந்தே கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்
பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250
வீதம் அபராதம்
ரூ 25,000 உயர்த பட்ச அபராதம்
பிரிவு 20 (2) படி துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை
மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம்
மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல்
அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான்
தண்டனை விதிக்க முடியும்
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட
பொது தகவல் அலுவலர்
மீது தண்டனை விதிக்க இயலாது.
குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம்
தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது
தண்டனைகள் (பிரிவு-20)
மாநில தகவல் ஆணையமானது, புகார்
அல்லது மேல்முறையீடு எதனையும்
தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம்
ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம்
ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர்
காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க
மறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான
கோரிக்கையினை உள்நோக்கத்துடன்
மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்த
தகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர்,
தகவலை அளிப்பதை எந்த முறையிலும்
தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம்
பெறப்படும் வரை அல்லது தகவல்
அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும்
ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல்
அலுவலர் மீது விதிக்கப்படும்.
எனினும், மொத்த தண்டத்
தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல்
இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம்
விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட
பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான
வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும்,
கவனத்துடனும்,
செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு,
அவரையே சார்ந்ததாகும்.

மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில்,
பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக,
அவருக்கு பொருந்தத்தக்க
பணிவிதிகளின்படி,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட
துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்
Thanks – thagaval ariyum sattam 2005
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலத்தில்
இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற
முடியும். இன்னும் சில இடங்களில் கால்
செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையதளங்கள்: http://
www.righttoinformation.gov.in http://
www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://
www.rtination.com என்ற தளத்தைப்
பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு,
அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான
போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல்
புகார்கள்
ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம்
கேட்கின்றனர்.
தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய
தளம் http://www.tn.gov.in/rti/

Friday 26 June 2020

பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் விடுப்பு ( CL , EL ) எடுக்கலாமா? பள்ளிக்கல்வித்துறை RTI பதில்.


பருவ விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் நாளில்(9+1=10) த.வி எடுக்க கூடாது, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளில் விடுப்பு எடுக்க கூடாது என நாமே விதி வகுத்துக்கொள்கிறோம். உண்மை விதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

பள்ளிக்கல்வித்துறை மூலம் 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட RTI பதில்.


Tuesday 10 May 2022

ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் RTI தகவல்

*RTI மூலம் பெறப்பட்ட தகவல்*

    இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி *வருடாந்திர* ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

     Pay matrix அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதில் சில பல இடங்களில் எழுந்த சிக்கல்களுக்கு இத்தகவல் உதவும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

Friday 28 September 2018

RTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை.





1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.


2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின்முழுமுகவரி

அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்


3.நீங்கள் முன்னர் ஏதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்


4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி


5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்


6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)


7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள்விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும்


8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில்அனுப்ப வேண்டும்.(மேல் முறையீட்டின் போது ஒப்புதல் அட்டைமுக்கியம்.


தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?

1) பதிவேடுகள் (Records),

2) ஆவணங்கள் (Documents),

3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),

4) கருத்துரைகள் (Comments),

5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,

6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),

7) சுற்றறிக்கைகள் (Circulars),

8) ஆவணங்கள் (Documentation),

9) ஒப்பந்தங்கள் (Agreements),

10) கடிதங்கள் (Letters),

11) முன்வடிவங்கள் (Model),

12) மாதிரிகள் (Models),.

13) கணினி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),

14) மின்னஞ்சல்கள் (Emails).

15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),

16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனைசெய்யும் உரிமை, (The right to review relevant documents and records),

17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) ஆகியன


தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு:

பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல்திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள்முதல் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின்பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடுசெய்யலாம்.


மாநில தலைமை தகவல் ஆணையர்,

தமிழ்நாடு தகவல் ஆணையம்,

2, தியாகராயசாலை,

ஆலயம்மன் கோவில் அருகில் ,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580


தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act தகவல் மறுத்தால் ரூ25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை


பொதுதகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகவேண்டிவரும்


1. நியாயமான காரனம் இல்லாமல் விண்ணப்பம் வாங்க மறுத்தால்

2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)

3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால்

4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும்வகையில் தகவலை தெரிந்தே கொடுத்தால்

5. தகவலை அழித்தால்

6. தகவல் கொடுப்பதை தடுத்தால்


பிரிவு 20 (1) படிநாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம்

ரூ25,000 உயர்த பட்ச அபராதம்

பிரிவு 20 (2) படிதுறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை

மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனைவிதிக்க முடியும்

தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்டபின்னர்தான் தண்டனை விதிக்க முடியும்

நியாயமாகவும் கவனமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீதுதண்டனை விதிக்க இயலாது.

குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது

தண்டனைகள் (பிரிவு-20)


மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும்

தீர்மானிக்கும்போது:


1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றிதகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;

2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்கமறுக்குமிடத்தும் ;

3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினைஉள்நோக்கத்துடன்

மறுக்குமிடத்தும் ;

4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;

5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும்தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லதுதகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும்.


எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல்இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமானவாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.

பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையேசார்ந்ததாகும்.

மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்குஎதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்குநடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரைசெய்யும்.


Friday 3 February 2023

உண்மைத்தன்மை சான்று கோரப்படும் நபரின் கல்வி பயின்ற வருடம் எதுவாகினும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் RTI பதில்

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் உண்மைத்தன்மைச் சான்றுகள் 1994 முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் உண்மைத்தன்மை சான்று கோரப்படும் நபரின் கல்வி பயின்ற வருடம் எதுவாகினும் உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் RTI பதில்!


Sunday 27 November 2022

S.S.L.C, +2, D.T.Ed ஆகிய சான்றிதழ்கள் 1994ஆம் ஆண்டிற்கு முன்பாக முடித்து இருந்தால் உண்மைத் தன்மை தேவை இல்லை RTI

S.S.L.C, +2, D.T.Ed ஆகிய சான்றிதழ்கள் 1994ஆம் ஆண்டிற்கு முன்பாக முடித்து இருந்தால் உண்மைத் தன்மை தேவை இல்லை RTI


Wednesday 14 December 2016

CPS பற்றி RTI மூலம் பதில்

CPS நீக்க கோரி 33 அரசு ஊழியர்கள் சங்கங்களும், 23ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டது என்றும், CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி 3097 மனுக்கள் பெறப்பட்டுள்ளன RTI மூலம் பதில்.

Monday 8 March 2021

கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் -RTI பதில்..


தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் RTI வாயிலாக பதில் தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது 150 வினாக்களும் முற்றிலும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்களின் விவரம் தனியாக பராமரிக்கப்படவில்லை என்பதையும் கூறியுள்ளது.


Monday 31 December 2018

தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்

தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPS திட்டத்தில் பணிபுரிந்துஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாகதமிழக அரசிடம் அரசாணை இன்னும் வெளியிடப் படவில்லயெனநிதித் துறை பதில் வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு!!



*பழைய ஓய்வூதிய திட்டத்தில், (GPF/TPF) தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு*

*1. மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம்,*

*2. பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மரணமடைந்தால், அந்த ஊழியர்களின் கணவன் (அ) மனைவிக்குமாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம்,*

*3. விருப்ப ஓய்வூதியம்,*

*4.இயலாமை ஓய்வூதியம்,*

*5.ஈடுகட்டும் (அ) இழப்பீட்டு ஓய்வூதியம்,*

*6. கட்டாய ஓய்வூதியம்,*

*7. இரக்க ஓய்வூதியம்*

என்னும் ஓய்வு பெறும் தன்மைக்கு ஏற்ப 7 வகையான

ஓய்வூதியம் நடைமுறையில் *தமிழக அரசால் வழங்கப்பட்டுவருகிறது.*

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தை சேர்ந்த *திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்,* தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்கவேண்டுமென, தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைஎண் (ம) நாளை குறிப்பிடவும், மேலும் இந்த அரசாணையின் நகலைவழங்கவும். என்று தமிழக அரசின் நிதித் துறைக்கு 20.11.2018 நாளிட்டமனுவில் வரிசை எண் 1 முதல் 6 வரையான தகவல்களை கோரி RTI 2005இன் கீழ் கடிதம் அனுப்பினார். நிதித் துறையின் கடிதஎண்.61444/நிதி (PGC-1)/2018 நாள்:14.12.2018 என்ற கடிதத்தில்

*மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணைவெளியிடப்படவில்லை. என பதில் வழங்கப்பட்டுள்ளது.*

CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு

அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம், விருப்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம்ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு

ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம் மற்றும் இரக்க ஓய்வூதியம் என்னும்7

வகையான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுஇன்னும் அரசாணை வெளியிடவில்லை.

அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால் அரசாணைபிறப்பிக்கப்படவில்லை

என்பதே உண்மை.

இவண்

அ.சி.ஜெயப்பிரகாஷ்

இ.நி.உ.ஆ

அரூர் ஒன்றியம்

தருமபுரி மாவட்டம்