. -->

Now Online

FLASH NEWS


Showing posts with label CPS NEWS. Show all posts
Showing posts with label CPS NEWS. Show all posts

Friday 26 May 2023

2022-2023 CPS ACCOUNT SLIP - DIRECT DOWNLOAD LINK ATTACHED

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துறையின் ‘’cps.tn.gov.in/public’’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Wednesday 16 June 2021

CPS வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அரசின் ஆய்வில் உள்ளது! அரசின் இறுதி முடிவுக்கு ஏற்றவாறு செயல்பட முடிவு!!

CPS வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அரசின் ஆய்வில் உள்ளது!!

அரசின் இறுதி முடிவுக்கு ஏற்றவாறு செயல்பட முடிவு என நிதித்துறை சிறப்புச் செயலாளர் Tmt.பூஜா குல்கர்னி IAS அரசுத் தகவல் மைய ஆணையருக்கு கடிதம்!!



Wednesday 26 May 2021

CPS தொகைக்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம்

CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

Sunday 18 April 2021

புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் கோரி வழக்கு , மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தில், குறைந்தபட்ச பென்ஷனை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கவுதமபுரியைச் சேர்ந்த சின்னத்துரை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை கோட்ட தபால்துறையில் அஞ்சல் உதவியாளராக கடந்த 1.7.2005ல் பணியில் சேர்ந்தேன். கடந்த 31.1.2018ல் ஓய்வு பெற்றேன். புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்ட எனது சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. என்னிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தில் 60 சதவீதம் ஓய்வின்போது வழங்கப்பட்டது. மீதமுள்ள 40 சதவீத பணத்தில் இருந்து மாத பென்ஷன் வழங்கப்படுகிறது

இதில் குறைந்தபட்ச பென்ஷன் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பிடித்தம் செய்த பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பென்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், எனக்கு மாதந்தோறும் ரூ.960தான் பென்ஷனாக கிடைக்கிறது. இது எனது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் தொகையை நிர்ணயிக்கவும், கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் பென்ஷன் வழங்குவதை உறுதி செய்திடவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். வக்கீல் பொற்கொடி கர்ணன் ஆஜராகி, ‘‘குறைந்த வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை உறுதிப்படுத்திட மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,454 பென்ஷன் வழங்கப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டத்தில் கூட குறைந்தபட்ச பென்ஷன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுவிற்கு ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய துணை பொது மேலாளர், தபால் துறை செயலர், தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், முதுநிலை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.28க்கு தள்ளி வைத்தனர்.

Source Dinakaran

Saturday 17 April 2021

CPS புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு

 CPS புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு



மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய பொதுமேலாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. தபால்துறை செயலர், தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஆகியோரும் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த சின்னத்துரையின் வழக்கை ஏப்ரல் 28க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது

Tuesday 23 February 2021

TAMILNADU GOVT. EMPLOYEES - GPF & CPS - RATES OF INTEREST 01.04.1956 முதல் 31.01.2021 வரை

TAMILNADU GOVT. EMPLOYEES - GPF & CPS - RATES OF INTEREST
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் - பொது வருங்கால வைப்பு நிதி & பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் -வட்டி வீதம்
01.04.1956 முதல் 31.01.2021 வரை

CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு


Saturday 13 February 2021

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக மாற்ற திட்டம்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11.15 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 2ம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட 8 சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இந்த மாத இறுதியில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.


கோப்பு படம்


இதுகுறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11.15 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும், தற்போதைய சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதாலும், இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதாலும் மக்களுக்கு என்னென்ன கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59ஆக உள்ளது. இதை 60ஆக உயர்த்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய சட்ட மசோதா வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. காரணம், தற்போது தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய் செலவாகும். இதனால் 60 வயதாக உயர்த்தினால், தற்போதைய நிதி நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. 
இதேபோன்றுதான், கடந்த ஆண்டு நிதி நிலைமையை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையின்மை அதிகரிக்கும், பதவி உயர்வு பாதிக்கும் என்று அரசு ஊழியர்களும், இளைஞர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வருகிற 24 அல்லது 25ம் தேதி (திங்கள்) தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

Wednesday 10 February 2021

2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT இணையதளத்தில் வெளியீடு

2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Saturday 23 January 2021

29.01.2021 அன்று மாநில அளவிலான 20 மண்டலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் : CPS ஒழிப்பு இயக்கம்

CPS ஒழிப்பு இயக்கம்



29.01.2021 அன்று மாநில அளவிலான 20 மண்டலங்களில் நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடங்கள்:

1. தென்காசி
2. விருதுநகர்
3. மதுரை
4. சிவகங்கை
5. இராமநாதபுரம்
6. திண்டுக்கல்
7. தேனி
8. கோயம்புத்தூர்
9. திருப்பூர்
10. நீலகிரி
11. ஈரோடு
12. கரூர்
13. தருமபுரி
14. சேலம்
15. திருச்சி
16. திருவாரூர்
17. கடலூர்
18. கள்ளக்குறிச்சி
19. திருப்பத்தூர்
20. திருவள்ளூர்

Thursday 21 January 2021

GPF, CPS, NPS மூன்றிற்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் என்ன ?

(GPF, CPS, NPS Comparisons......) :GPF பழைய ஓய்வூதியத்திட்டம் ,CPS தமிழக அரசின் புதிய பங்களிப்பு ஓய்வுத்திட்டத்திட்டம்,NPS மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வுத் திட்டத்திட்டம் என மூன்றிற்கும் உள்ள ஒற்றுமைகள்,வேற்றுமைகள் என்ன ?


இரத்து செய்யக் கூடியதே புதிய ஓய்வூதியத் திட்டம்!




1990 களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல்  கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த மத்திய மாநில அரசுகளும் கொண்டுவந்தன.

அவற்றின் விளைவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கடந்த 2003-ஆம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு 22. 12.2003-ல் அவசரச் சட்டமாக முன்மொழிந்தது.

அதனைத்தொடர்ந்து, வேறு எந்த மாநிலங்களிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே 1.4.2003 முதல் அஇஅதிமுக தலைமையிலான தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தியது. மத்திய அரசு 01.01.2004 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் 10 ஆண்டுகளாக எவ்விதமான வழிகாட்டுதல்களுமின்றி ஜனநாயக மரபுகளுக்கு மாறாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு ஊழியர்களிடம் பங்களிப்புத் தொகையை பிடித்தம் செய்தன.  புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான சட்டமானது 04.09.2013-ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு 19.9.2013 ஆம் தேதியில் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் அதற்கான வட்டி என மொத்தமாக சுமார் 36,000 கோடி தமிழக அரசிடம் உள்ளது. 

இந்த புதிய  ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலேயே தமிழகத்தில் நம்மைப் போன்ற முற்போக்கு  ஆசிரியர் சங்கங்களும் அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து கடுமையாக எதிர்த்ததுடன், இத்திட்டத்தினை எதிர்த்து தொடர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலகட்டப் போராட்டங்களை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக 2016 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து 19.2.2016 தேதியில் அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாஅவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், புதிய ஓய்வூதியத்தில் மரணமடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒருமாதத்தில் பணப்பலன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து 23.2.2016 அன்று தமிழக அரசு வல்லுநர் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை வழங்க அரசாணையும் வெளியிடப்பட்டது. 

இந்த அரசாணையின் அடிப்படையில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 484 கோடி ரூபாய் தொகையினை, 'மீண்டும் எவ்விதமான ஓய்வூதியப் பலன்களையும் கோரமாட்டோம்' என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் இத்திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளிக்கப்பட்டுள்ளது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான வல்லுனர் குழுவானது 23.2.2016 தேதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருமதி.சாந்தா ஷீலா நாயர்  தலைமையில் அமைக்கப்பட்டது. அதனுடைய ஆய்வுக் காலமானது நான்கு மாதங்களாக வரையறை செய்யப்பட்டது. இந்த நான்கு மாத காலத்தில் குழுவானது எந்த ஒரு அரசு ஊழியர் / ஆசிரியர் இயக்கத்தையும் சந்திக்கவில்லை. மேலும், நான்கு மாத காலத்தில் ஒரு முறை மட்டுமே கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நான்கு முறை காலநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் வல்லுநர் குழுவின் தலைவர் சாந்தா ஷீலா நாயர் 2017-ல் தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

இதனைதொடர்ந்து திரு.டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் வல்லுனர் குழு செயல்பட்டு கடந்த 27 11.2018-ஆம் தேதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தனது ஆய்வு அறிக்கையை வழங்கியது.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் விளைவாக 2019 ஜனவரி மாதத்தில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வல்லுநர் குழு அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் வைத்து உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வழங்கப்பட்டது.

வல்லுநர் குழு அறிக்கையானது அரசிடம் அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் தொடர் மௌனத்தைத் தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.

2011 & 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக அ.இ.அ.தி.மு.க அரசு வாக்குறுதி வழங்கியதையும் நாம் மறந்துவிட முடியாது.

இப்புதிய ஓய்வூதியத் திட்டமானது மாநில அரசுகளின் விருப்பத்தின் அடிப்படையிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயத்தின் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் தான் தொழிலாளர் நலனை நோக்காது வலதுசாரித் தத்துவத்தின் கீழ் செயல்படும் கட்சிகள் மாநில ஆட்சிப் பொறுப்புகளை ஏற்ற பின்னர் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் 2010-ஆம் ஆண்டிலிருந்தும், கேரளாவில் 2013-ஆம் ஆண்டிலிருந்தும் திரிபுராவில் 2018-ஆம் ஆண்டிலிருந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் நிதிச் செலவினம் கூடுகிறது என்ற அடிப்படை வாதத்தை வைத்தே பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் தான் நிதிச்சுமையே அதிகரித்துள்ளது. பழைய ஓய்வூதியத்திட்டத்தில் ஊழியரின் ஓய்விற்குப் பின்னரே அரசு ஓய்வூதியப் பலன்களை அளிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போதைய புதிய திட்டத்தால் அரசு ஓய்வூதியப் பலன்கள் ஏதும் வழங்குவதில்லை என்ற போதிலும் ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக அரசு ஊழியர்களுக்கான அரசின் பங்களிப்புத் தொகையைக் கணக்கில் செலுத்தியாக வேண்டிய சூழல் ஏற்பட்டு மாதாந்திர நிதி  நெருக்கடி அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது வரை தமிழக அரசு ஓய்வூதிய ஒழுங்காற்றுமுறை ஆணையத்தில் கையெழுத்திடாததால் தான் ஊழியரின் பங்களிப்பையும் அரசின் பங்களிப்பையும் வட்டியுடன் ஓய்வின் போது வழங்கி வருகிறது. இல்லையேல், இத்தொகையையும் அரசு தனது ஊழியருக்கு வழங்க இயலாது. பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்தாக வேண்டும்.

பங்குச் சந்தை என்பது அபாயமிக்க சூதாட்டம். நமது நாட்டின் சூழல் மட்டுமன்றி உலக நாடுகளில் ஏற்படும் மாற்றங்களும் நமது நாட்டின் பங்குச் சந்தையைப் பாதித்து பேரிழப்பை ஏற்படுத்தும் என்பது நாம் அன்றாடம் காணும் நிகழ்வே. ஆக, ஊழியருக்கும் பயனின்றி அரசிற்கும் பயனின்றி நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் பொருளாதாரப் பேரிடர் திட்டமே இந்த புதிய ஓய்வூதியத் திட்டம்.

கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசானது இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் தொடரைச் செய்வதன் மூலமாக சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பு தொகையை ஊழியருக்கு வழங்கவேண்டிய தேவையே இருக்காது. மேலும், மாதாந்திர தொடர் செலவினத்தையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

எனவே, மாநில சுய விருப்பின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கும் அரசிற்கும் நலம் பயக்கக்கூடிய நடவடிக்கையாகும்.

பி.பிரெடெரிக் எங்கெல்ஸ். 
 *மாநில ஒருங்கிணைப்பாளர்.
*CPS ஒழிப்பு இயக்கம்.

Monday 18 January 2021

RTI - CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலை பற்றிய 13 புதிய தகவல்கள் !

RTI - 13.01.2021 நிலவரப்படி CPS வல்லுநர் குழு பற்றிய 13 புதிய தகவல்கள் ! 

தகவல் பகிர்வு : 

அ.சி.ஜெயப்பிரகாஷ்.
 தருமபுரி மாவட்டம்.

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை 119 பக்கங்களை கொண்டது என RTI கடித தகவல்



CPS வல்லுநர் குழு தனது அறிக்கையினை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அய்யா அவர்களிடம் 27.11.2018 அன்று சமர்ப்பித்தது.

மேலும் அந்த அறிக்கையானது மொத்தம் 119 பக்கங்களை கொண்டது என RTIயில் பதில் வழங்கப்பட்டுள்ளது.


   CPS வல்லுநர் குழுவானது, சங்கங்களின் கருத்து கேட்பு கூட்டம் 22.09.16 அன்று நடந்ததே கடைசியாகும். அதற்கு பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.



அக்குழுவின் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடைசியாக 30.04.2018 அன்றும், 2006 முதல் இன்று வரை 11 முறை ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளது. அதன் பின்னர் எந்தவொரு கூட்டமும் நடத்தவில்லை.

 மேலும் 33 அரசு ஊழியர் சங்கங்களிடமும், 24 ஆசிரியர் சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

CPSயை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று வரை 4012 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்

 CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.



தமிழக அரசால் இக்குழுவிற்கு ரூ.40,000/- செலவு செய்யப்பட்டுள்ளது என நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.