. -->

Now Online

FLASH NEWS


Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday 7 September 2021

கேளுங்கள் கொடுக்கப்படும் - படித்ததில் பிடித்தது

ஒரு நல்ல கதையை இணையத்தில் படித்ததில் வாழ்க்கையின் ரகசியத்தை உணர்ந்தேன்!.

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. 

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. 

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. 

குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. 

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. 

ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. 

ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. 

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது.

 ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. 

அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. 

அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.

தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. 

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது

 ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். 

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. 

வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. 

அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். 

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். 

அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. 

அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். 

அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். 

அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. 

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. 

நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. 

ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். 

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. 

ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. 

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். 
ராஜாவிடம் சொல்லிவிடுவேன்.

நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். 

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். 

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. 

உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். 

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்களின் இஷ்டம். 

எதுவும் கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது.

கேட்போம்! பெறுவோம்!!

Monday 23 August 2021

பலமும் பலவீனமும் - படித்ததில் பிடித்தது

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்து விட்டு திருப்பி அனுப்பி விட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்

“குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லி விட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான்.

பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்தி விடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு. இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.

பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான். பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்

குருவே. நான் எப்படி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்

புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே ! உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது

Friday 20 August 2021

மகிழ்வித்து மகிழவும்.. மகிழ்ந்து மகிழ்விக்கவும் -படித்ததில் பிடித்தது



எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத் திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார்.
  
அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிச் சென்று விட அவர் சென்னையில் தனித்து இருக்கிறார். கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சென்ற ஆண்டு வரை அவருடன் அவரின் வயதான அம்மாவும் வசித்து வந்தார். அம்மா படுத்தப் படுக்கை என்பதால் அவரை கவனித்துக் கொள்வதிலேயே நிறைய நேரம் செலவாகி விடுவதால் நிறைய எழுத முடிவதில்லை என்று சொல்வார்.

சென்ற வருடம் அவர் அம்மா இறந்து விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் எழுதுவது குறைந்தது. ஒருகட்டத்தில் நின்றே போனது. அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பாக இருந்தது.

‘என் அம்மா படுத்தப் படுக்கையில் இருந்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அன்றாட செய்தித்தாள்களை படித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாட்டு நடப்புகளை என்னுடன் பகிர்ந்து கொண்டு விவாதிப்பார். எழுதுவதற்கு என் அம்மா தான் மறைமுகமாக மனதளவில் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார் என்பது அவர் உயிருடன் இருந்த போது தெரியவில்லை, இறந்த பிறகு தான் தெரிந்தது. எதிலும் வெறுமை, ஊக்கமின்மை,பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாததால் எழுதுவதற்கு வார்த்தைகள் கூட வருவதில்லை. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. ஆனால் எழுத மனதில் ஊக்கம் இல்லை’ என்று சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.

இதில் ஓர் உளவியல் உள்ளது. கடைசியில் சொல்கிறேன். இப்போது ஒரு கதையைப் படியுங்கள். 

ஒரு திருடன் சர்க்கஸ் பார்க்கப் போனான். வட்டமான நெருப்பு வளையத்துக்குள் சர்க்கஸ் வீரன் ஒருவன் பாய்கின்ற காட்சி. நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அந்த சர்க்கஸ் வீரனிடம் சென்று இந்தப் பணிக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் எனக் கேட்டான். அதற்கு அந்த வீரன் ‘ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்’ என்ற போது ‘என்னுடன் வா, உனக்கு ஐயாயிரம் தருகிறேன்’ எனக் கூறி அழைத்துச் சென்றான்.

அடுத்த நாள் அந்தத் திருடன் ஒரு வீட்டில் திருடச் செல்லும் போது சர்க்கஸ் வீரனையும் அழைத்துச் சென்றான். அந்த வீட்டின் சுவரின் மேல்பக்கம் ஒரு துளை இருந்தது. அதை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிதுபடுத்திக் கொடுத்த பிறகு சர்க்கஸ் வீரனிடம், ‘இந்தத் துளை வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி எடுத்து வா’ என்று சொன்னான்.

அதற்கு சர்க்கஸ் வீரன் கொஞ்சமும் தாமதிக்காமல் ‘அப்படிச் செய்ய வேண்டுமானால் பத்தாயிரம் பேரைக் கொண்டு வா’ எனச் சொல்ல திருடனுக்கு பேரதிர்ச்சி. ‘ஏன்’ எனக் கேட்கிறான்.

சர்க்கஸ் வீரன், ‘நான் சர்க்கஸில் நெருப்பு வளையத்துக்குள் நானாக நுழைந்து செல்வதில்லை. சர்க்கஸ் பார்க்க வருகிற பத்தாயிரம் மக்கள் கை தட்டுவதினாலும் விசில் அடித்து உற்சாகப்படுத்துவதினாலும் எனக்குள் பொங்குகின்ற உற்சாகத்தினால் தான் நெருப்பு வளையத்துக்குள் அத்தனை லாவகமாக நுழைகிறேன். நெருப்பு வளையத்துக்குள் நுழைவதைப் போல இந்த சுவரின் பெரிய ஓட்டைக்குள் நுழைந்து உள்ளே சென்று வர வேண்டுமானால் எனக்கு பத்தாயிரம் பேர் கை தட்ட வேண்டும்’ என்று சொல்லத் திருடன் தலை சுற்றி மயக்கமடைந்தான். இந்தக் கதையை புலவர் கீரன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொல்லியுள்ளார். 

இந்த இரண்டு நிகழ்வுக்கும் பொதுவாக ஓர் உளவியல் இருப்பதைக் கவனியுங்கள்.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் காட்டுகின்ற அன்பிலும், ஆதரவிலும், ஊக்கத்திலும் உண்டாகும் உற்சாகமே நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உற்சாகமாக இருக்கும் போது தான் மனமும் சுறுசுறுப்புடன் செயல்படும். துறுதுறுவென எதையாவது செய்ய வைத்து நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். உற்சாகம் குறையும் போது நம் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு தூசியைக் கூட நம்மால் தன்னிச்சையாக தட்டி விட்டுக் கொள்ள முடியாது. 

நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணமில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மைத் சுற்றி உள்ளவர்களை பெருமகிழ்ச்சியோடு வைத்திருப்போம்.

மகிழ்வித்து மகிழ்வோம், மகிழ்ந்து மகிழ்விப்போம் வாங்க.!



Wednesday 18 August 2021

கோபம் பற்றி பாலகுமாரன் - படித்ததில் பிடித்தது

நம் எல்லோருக்கும் கோபம் வருகிறது. வார்த்தைகளுக்கு வசப்படாத கோபம் வருகிறது. புத்தியால் கட்டுப்படுத்த இயலாத கோபம் வருகிறது.

நல்லவருக்கு, கெட்டவருக்கு, பலசாலிக்கு, அடிமைத் தொழில் செய்பவருக்கு அதிகாரிகளுக்கு எந்த பேதமும் இல்லாமல் கோபம் வருகிறது.

சில சமயம் அதை அடக்க முடியாமல் போய் விடுகிறது. தசை வலிமையாய் வஞ்சம் தீர்க்கும் செயலாய் வெளிப்படுகிறது.

கோபத்தை அடக்குவது தவறு என்று நான் படித்திருக்கிறேன் உணர்ந்திருக்கிறேன்.

சினம் அடக்க அது வெஞ்சினம் ஆகிறது. அழுத்தி உள்ளே புதைக்க மீண்டும் பீறிட்டுக் கிளம்புகிறது. இதன் விளைவு விபரீதத்தில் முடிகின்றது.

கோபத்தை அடக்க முயற்சிக்காமல் ஆராய முயற்சி செய்யுங்கள்.

ஆராய்வது தான் அடக்கும் வழிகள் என்று நினைக்கின்றேன்.

'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பது கூட ஆழ யோசித்துப் பார்க்கையில் எதிராளியின் கோபத்திற்கு உடனே எதிர்கொள்ளாமல், அவன் கோபத்தை முற்றிலும் ஏற்று, ஆராய்ச்சிக்கு முயற்சிக்கும் அடிப்படைச் செயல் என்றே தோன்றுகிறது.

ஓர் அறை கொடுக்க வந்தவனை நான்கு அறை தரும்படிச் செய்து விட்டால் அவன் கோபமும் தளரும், அறை வாங்கிய வலியில் உட்கார்ந்து விட்ட நாம், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது புரியும் என்று தோன்றுகிறது.

 உண்மையில் கோபமென்பது இயலாமையின் வெளிப்பாடு. சூழ்நிலையின் தாக்கத்தில் தடுக்கி விழுந்து விடுகிற துரதிஷ்டம். ஆற்றாமை எனும் கழிவு நீர் புகும் சாக்கடை, அவசரத்தில் திசைமாறும் விஷயம்.

உன்னிப்பாய் கவனிக்க கோபம் என்பது பல நேரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவில் குறைந்தோர் மீதே காட்டப்படுகின்றது. பற்றில்லாதவனுக்கே கோபமில்லாமல் போகும் என்று படித்திருக்கிறேன்.

பற்றற்றிருப்பது என்பது நம்மைப் போல் பாமரர்களுக்கு முடியாத விசயம். பற்றுகள் அதிகரிக்க கோபம் இயல்பு. இந்த இயல்பைச் சரியானபடி பழகாது போக இம்சைகள் வளரும். இம்சைகள் வளர கோபம் பெருகும். பிறகு முடிவில்லாத விஷவட்டம்.

எனவே தான் இந்த இயல்பை அடக்கி வைக்காமல் ஆராய வேண்டும் என்கின்றேன். கோபம் எழுகிற போதே பிரித்துப் பார்க்க எண்ணுகிறேன். அப்படிப் பிரிக்க கோபம் பலகீனம் அடைகிறது. அதன் அடிவேர் புரிய , வெளிப்படுத்துவதில் நிதானம் வருகிறது. 

கோபத்தை பிரிப்பது அடிவேரை அறிவது என்று எழுதினால் எவருக்கும் எளிதில் புரியாது அதனால் கோபம் தவிர்ப்பது பற்றி எனக்குத் தெரிந்த, நான் கையாளுகிற வழிமுறைகள் சொல்ல விரும்புகின்றேன்.

எனக்கு கோபம் வருகிறது. வெளிப்படுத்த சொல், செயல் துடிக்கின்றன. அதை உடனே வெளிப்படுத்தாமல் 5 நிமிடம் தள்ளிப் போடுகிறேன். அப்பொழுது வேகம் மட்டுப்படுகிறது. இன்னும் மட்டுப்பட விரும்பினால் மறுபடியும் 5 நிமிடம் தள்ளுகிறேன்.

அந்த முதல் நிமிடத்திற்கு பத்தாவது நிமிடத்திற்கும் மிகுந்த வித்தியாசம் இருப்பதை உணர்கிறேன். கோபமூட்டியவரே, திடமாகவும், திறனாகவும், சமாளிக்கும் திறமை ஏற்பட்டு விடுகிறது.

இந்த இடைப்பட்ட பத்து நிமிடத்தில் வானம் பார்க்கிறேன். தரையில் உள்ள கட்டங்களை கண்ணால் அளவெடுக்கிறேன். பேப்பரும் பேனாவும் இருந்தால் படம் போடுகிறேன். கண்ணாடி முன் நின்று ஒரு முறை தலையைக் கலைத்து விட்டு மீண்டும் வாருகிறேன்,அல்லது பின்பக்கம் போய் வருகிறேன்.

இதில் படபடப்பு கொஞ்சம் குறைகிறது. மறுப்போ, எதிர்ப்போ, கோபமாக இல்லாமல் தெளிவாக வருகிறது. சினம் வெஞ்சினமாக மாறாமல் எதிராளியின் பலம் அறிந்து செயல் திறனை அதிகரிக்கிறது. செயல் திறன் அதிகரிக்க கோபப்பட்ட எதிரியை எப்படிக் கையாள வேண்டும் என்கிற நிதானமும் வந்து விடுகிறது.

எனக்குள்ளும் நெடுநாளையக் கோபங்கள் உண்டு. பிடரி சிலிர்த்து, கும்பளத்தைத் தரையில் கீறி,பல் காட்டிக் கனைக்கும் குதிரைகளாய்ச் சில கோபங்கள் உண்டு. அவைகளைத் தட்டிக் கொடுத்துப் பழக்கி வருகிறேன். அதுகளுக்குச் சேணமிட்டு வாழ்க்கையெனும் வண்டியில் பூட்டி வருகிறேன்.

என் கோபங்களே நான் நினைக்கும் என் இலக்குகளுக்கு எளிதில் எடுத்துப் போகின்றன. பிறரைப் பழி வாங்குவதை விட்டுவிட்டு என் பயணத்திற்கு உதவி செய்கிறது.
 
கோபம் நல்லது..!

அது காட்டுக்குதிரை. புத்தியென்னும் கயிறு கட்டிப் பழக்கப்படுத்துங்கள்.

வெற்றி எளிது. வெற்றி கிடைத்த பின் நம் கோபம் நமக்கே நகைப்பாகும் கோபமூட்டியவரைப் பயம் தாக்கும்.

நம்மால் நாமே அழிவது தான் நகைப்புக்கிடமாகும். நாம் நல்லவர் என்ற நினைப்பே நம் கோபம் சந்தேகத்திற்கிடமாகும்.

ஏனோ தெரியவில்லை... 
என்கிற கட்டுரைத் தொகுப்பு

எழுத்துச் சித்தர் பாலகுமாரன்..

Wednesday 4 August 2021

வாழ்க்கை - படித்ததில் பிடித்தது



விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். 

அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.

இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, 

"இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது.

ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,

மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.

அந்த வழியாக வந்த விவசாயியின் மகன், "இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,

இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.

தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.

*நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால்.. சில கசப்பான கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..!!*

Saturday 31 July 2021

மனித நேயம் - படித்ததில் பிடித்தது

நாய்க்குட்டிகள் விற்பனைக்கு...

என்று எழுதியபலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

அந்தப்பலகை குழந்தைகளை ஈர்க்கும்
என்று நினைத்தார் அவர்.அதன்படியே
ஒரு சிறுவன்,கடையின் முன் வந்து நின்றான்.

"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன
விலைக்கு விற்கப் போகிறீர்கள்?"
என்று கேட்டான்.

1000ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று- கடைக்காரர் பதில் சொன்னார்.

நான்நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து,
உள் பக்கம் திரும்பி விசிலடித்தார்.
நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன.

ஒரு குட்டி மட்டும் மிகவும்
பின்தங்கி மெதுவாக வந்தது.
பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த
அந்தக் குட்டியை உடனே கவனித்த
சிறுவன், என்னாச்சு அதுக்கு?
என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த
கால்நடை மருத்துவர், அதற்குப்
பிற்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை.எனவே எப்போதும் முடமாகத் தான் இருக்கும்
என்று கூறிவிட்டதாக விளக்கினார்
கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.
இந்தக் குட்டிதான் எனக்கு வேணும். என்றான்.

அப்படின்னா நீ அதுக்குக்
காசு கொடுக்க வேணாம். நான்
அதை உனக்கு இலவசமாகவே தர்றேன் என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில்
இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப்பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.

நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாக
கொடுக்க வேணாம். மற்ற நாய்க்
குட்டிகளைப் போலவே இதுவும்
விலை கொடுத்து வாங்கத்
தகுதியானது தான்.

நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்
தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட கொஞ்சம் பனம் தான் இருக்கு. பாக்கித்
தொகையை மாசமாசம் கொடுத்து கழிச்சிடறேன். என்றான்.

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.
"பையா... இந்த நாய்க் குட்டியால
உனக்கு எந்தப் பிரயோஜனமும்
இல்லை.இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது...குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது. என்றார்

உடனே, அந்தப் பையன்
குனிந்து தனது இடது கால்
பேண்டை உயர்த்தினான்.
வளைந்து, முடமாகிப் போயிருந்த
அக்காலில் ஓர் உலோகப்
பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்து சொன்னான்.

என்னாலும் தான் ஓட முடியாது
குதிக்க முடியாது. இந்தக்
குட்டி நாயின் கஷ்டத்தைப்
புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத்
தேவை!" என்றான்.

கடைக்காராரின் கண்களில் கண்ணீர் வழிந்து சிறுவனை அணைத்துக் கொண்டார்.

மனிதர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள் இவ்வுலகில் ஆனால் மனிதநேயதுடன் வாழ்பவர்கள் எத்தனைப் பேர்.....?

உன் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கிறாய். ஆனால் பிறர் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.....!

மனிதநேயம் தேடி பயணிப்போம்...

Saturday 26 June 2021

குழந்தைகளுக்கு கற்பனை வளர கதை சொல்லுங்க



தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கார்டூன் சேனல்களும், யுடுயுப்பில் ரைம்ஸ் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள்.

 கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், கிரியேட்டிவிட்டியும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

*நேரம் செலவிடலாம்*

இரவு நேரத்தில் படுத்துக்கொண்டே கதை கேட்பது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று எனவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்தக்கூடிய கதைகளை சொல்லி அவர்களை மகிழ்விக்கலாம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையோடு அதிக நேரம் செலவிட முடிகிறது.

தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது. நல்ல கதைகளை கூறுங்கள். அரிச்சந்திரன், சிரவணன் கதைகள்தான் மகாத்மா காந்தியை உருவாக்கியது.

*வாழ்க்கைக் பாடம் புரியும்*

கதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.

பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.

கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

டிவி, கணினி போன்ற மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோர்கள், குழந்தைகள் இடையேயான உரையாடல் என்பது குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிர்ந்து கொள்ள முடியும்.

குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

*நம்பிக்கை வளரும்*

கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பாரவளரும்.

உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.

*கற்பனை வளரும்*

குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். 

அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். கிரியேட்டிவிட்டி, கற்பனை திறன் வளரும்.

Friday 25 June 2021

உடைந்த காலம்... படித்ததில் பிடித்தது


நட்பு உடைந்து முகநூலானது...
வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் லைக் ஆனது...
சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது...
உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது...

குளக்கரை உடைந்து குளியறையானது...
நெற்களம் உடைந்து கட்டடமானது...
காலநிலை உடைந்து வெப்பமயமானது...
வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது...

துணிப்பை உடைந்து நெகிழியானது...
புவிநீர் உடைந்து பெப்சியாய் ஆனது...
அங்காடி உடைந்து அமேசான் ஆனது...
ஒத்தையடி உடைந்து எட்டுவழியானது...

சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது..
இட்லி உடைந்து பர்கர் ஆனது...
தோசை உடைந்து பிட்சாவானது...
குடிநீர் உடைந்து குப்பியிலானது...

பசும்பால் உடைந்து பாக்கெட் பாலானது...
வெற்றிலை உடைந்து பீடாவானது...
விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது...

கடிதம் உடைந்து இமெயிலானது...
விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது...
பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது...
புத்தகம் உடைந்து இ-புக் ஆனது...
தொலைபேசி உடைந்து கைபேசியானது...

வங்கிகள் உடைந்து பே டி எம் ஆனது...
நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது...
புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது...

மார்க்கம் உடைந்து மதவெறியானது...
அரசியல் உடைந்து அருவெறுப்பானது...
பொதுநலம் உடைந்து சுயநலமானது...
பொறுமை உடைந்து அவசரமானது...
ஊடல் உடைந்து விவாகரத்தானது...
காதல் உடைந்து காமமாய்ப் போனது...

நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால்...
உடைவது உலகினில் நிரந்தரமானது...
தீயவை உடைத்து நீ தீங்கறச் செய்திடில்...
அல்லவை உடைந்திங்கு நல்லவை வாழுமே...

Sunday 20 June 2021

தந்தையர் தினம் உருவான வரலாறு


தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்ததினம் முழுமையடையச் செய்கிறது.

வரலாறு..

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. 

உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.

ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது. மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.

இது அதிகார்வப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. இருந்தபோதும் YWCAஇல் இருந்த ஆதரவால் YMCA மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் இது காலெண்டர்களில் இல்லாத போதும் கொண்டாடப்பட்டது. அன்னையர் தினம் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்ட போது, தந்தையர் தினம் குதூகலமாய் கொண்டாடப்பட்டது. தவறான காரணங்களுக்காக இதற்கான விடுமுறைநாள் மெதுவாக கவனம் பெற்றது. ஸ்போக்ஸ்மன்-ரிவியூ என்ற உள்ளூர் செய்தித்தாளில் நகைச்சுவை உள்ளிட்ட அதிகமான பழிப்பு, பகடி மற்றும் ஏளனம் ஆகியவற்றிற்கு இது உள்ளானது. சிந்தனையற்று ஊக்கவிக்கப்பட்டும் "முன்னோர்கள் தினம்", "புரொபசனல் செக்ரட்டரீஸ் தினம்" மற்றும் பல தினங்களைப் போன்று காலெண்டரை நிரப்புவதற்கு முதல் படியாகவே இதைப் பல மக்கள் பார்த்தனர் "தேசிய மேசைச் சுத்தப்படுத்தும் தினம்" போலத்தான் இதுவும் எனக் கருதினர்.

1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார். மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[4] 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.

தந்தையர் தினம் மட்டுமின்றி பல நாடுகளில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இது பெரும்பாலும் நவம்பர் 19இல் கொண்டாடப்படுகிறது.

வணிகமயமாக்கல்..

1930களில் ஆண்களின் உடுப்புகளுக்கான இணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் நியூயார்க் நகரத்தில் தேசிய தந்தையர் தின செயற்குழுவை அமைத்தனர். 1938 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயரானது தந்தையர் தினத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய கவுன்சில் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதில் பிற வாணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்தன. மக்களின் மனதில் இந்த விடுமுறையை சட்டரீதியாக ஆக்குவதும் மேலும் விடுமுறையில் விற்பனையை பெருக்குவதற்காக இந்த விடுமுறையை மிகுந்த திட்டமிட்ட வழியில் வர்த்தகரீதியான நிகழ்ச்சியாக செயல்படுத்துவதும் இந்த கவுன்சிலின் நோக்கமாகும். இந்த கவுன்சிலுக்கு டோடின் ஆதரவு எப்போதும் இருந்தது. 

இந்த விடுமுறையை வணிகமயமாக்குதலால் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேலும் பரிசுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்த்துவதற்கான பல்வேறு ஊக்குவித்தலுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். இந்த விஷயத்தில் அன்னையர் தினத்திற்கான அனைத்து வணிகமயமாக்குதல்களையும் தற்போது எதிர்த்துக் கொண்டிருக்கும் அன்னா ஜார்விஸுக்கு எதிரானவராக இவரைக் கருதலாம்.

வணிகர்கள் இந்த விடுமுறையை பகடி செய்யும் மற்றும் நையாண்டி செய்யும் போக்கைக் கண்டுகொண்டனர். மேலும் இந்த நாளில் தந்தையர்களுக்கான பரிசுகளை விளம்பரம் செய்யும் அதே விளம்பரங்களில் கேலிச் செயல்களில் ஈடுபட்டு அவர்களின் ஆதாயத்திற்காக அதைப் பயன்படுத்திக்கொண்டனர். பரிசுப் பொருள்களில் வணிகத்தனத்தைக் கண்டாலும் மக்கள் பரிசுகளை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இந்த நாளில் பரிசுகள் வழங்கப்படுவது இதன் ஆதரவாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் ஆறு பேரில் ஒரே ஒரு தந்தை மட்டும் அந்த நாளில் பரிசு பெறுவதாக தந்தையர் தின கவுன்சில் கணக்கிட்டது. எனினும் 1980களில் இந்த கவுன்சில் அவர்களது நோக்கத்தை அடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தியது: அதாவது இந்த ஒரு நாள் நிகழ்ச்சி ஒரு "இரண்டாவது கிறிஸ்துமஸ்" போல மூன்று வாரங்களுக்கு கொண்டாடப்படும் வணிக நிகழ்ச்சியாக மாறியது. 

1949 ஆம் ஆண்டில் கவுன்சிலின் தலைமை அதிகாரி இதைப் பற்றி விவரிக்கும் போது, கவுன்சிலின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமலும் மற்ற அமைப்புகளின் ஆதரவு இல்லாமலும் இருந்தால் இந்த விடுமுறை மறைந்து போயிருக்கலாம் என்றார்...

குடும்பத்தின் சுமைதாங்கி - இன்று தந்தையர் தினம் ஸ்பெஷல் !




இன்று தந்தையர் தினம் ஸ்பெஷல் !

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது !


#அப்பாவிற்கு அழத்தெரியாது!!

⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்...

⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்....

என்னடா வாழ்க்கை இது என...
#ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!

⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து...

⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து....

⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து.....

போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்....

தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!


#நாம்அவரைகல்லெனவே #நினைத்துவிட்டோம்!

⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!

⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!

⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!

ஆனால்,
⚽தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள... அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!

⚽நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்......

தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் #ததும்பும்ஜீவன்அது!

⚽ நாம் திண்ணும் சோறும்...

⚽ உடுத்தும் உடையும்...

⚽ படித்த படிப்பும்....

#அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!

⚽நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!

⚽ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!

⚽அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்....


#அப்பாவின்பாசத்தைஉணரக்கூட #இல்லையோ!

⚽நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகலிப்பார்!

⚽தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!

⚽வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!


நம் வாழ்க்கையின் பின்னால்…
#அப்பாஎப்போதுமேஇருப்பார்!


⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!

⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!

⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!

⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!

⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!

#அந்த_பைத்தியத்திற்கு
#அழவும்_தெரியாது!

⚽வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்...

⚽ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்...

⚽முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்....
அவர் அழுதவரில்லை!

#நம்சந்தோஷத்திற்காகவேஎதையும் #தாங்கும்ஆன்மாஅவர்!

⚽ பாசமோ

⚽ மன்னிப்போ

⚽ அழுகையோ
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!

🏀 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
மரணமோ....

🏀 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ.....

🏀 உங்களை புரட்டி போட்டு...
அவர் பாசம் புரிந்து.....
அப்பாவை தேடி ஓடிரும்போது.....

🏀 வீட்டில் அப்பா…
சிரித்துக்கொண்டிருக்கலாம்…
புகைப்படத்தில்! !

#பாவம்_அவருக்குதான்....
#அழத்தெரியாதே!!

மொத்தத்தில் அவர்

குடும்பத்தின் சுமைதாங்கி.

தந்தையர் தின வாழ்த்துகள்
- கல்விச்சுடர்

பதறிய காரியம் சிதறிப்போகும் - படித்ததில் பிடித்தது

*வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்!...*
*


''பதறிய காரியம் சிதறிப்போகும்'என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. 

*பதற்றம்* 

‘உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே... ‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு வேலையைச் செய்வார்கள் சிலர். அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய ‘அவுட்புட்’ கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக, கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்கொள்ளும்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும் பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

தென்கச்சி கோ. சுவாமிநாதன்இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன ஒரு குட்டிக்கதை... 

கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும்... மாணவர்களிடம் பயம் தொற்றிக்கொள்ளும். `இன்று என்ன கேள்வி கேட்பாரோ... யாரைக் கேட்கப் போகிறாரோ...’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள். இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார். 

அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’ என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார். 

“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார். அதோடு, "இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச் சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம் விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.

அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான். "இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்...’’ என்றான். 

“தவறு.’’ 

“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 - 9 = 45” என்றான் மற்றொரு மாணவன். 

“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’ 

மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.

“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி, என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான் அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான் சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பதற்றம். ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால் தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

டென்ஷன் பயம்

ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு நழுவிப்போகலாம்.

மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி, முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள். அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களைப் புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல... அவர்களின் நல்லுறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.

இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள் ‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு, இறைவனின் அருள் கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள். 

இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல... எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில் ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப் பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே அடைய முடியும். பதற்றத்தைத் தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்போம்..!

சிந்திப்போம் வரும் நாளை சந்திப்போம்


Wednesday 16 June 2021

யாரையும் குறைவாக மதிப்பிடாதீர்கள்....படித்ததில் பிடித்தது

*இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது...*

கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டு இருக்கிறான்.  

இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டாலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.

"ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப் பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக் கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?" இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.

உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. "மன்னிக்க வேண்டும். தவறு தான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்"என்று பதில் வருகிறது. சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன் தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவி விடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்து விடுகிறது.

வழியனுப்பும் போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லி விட்டால் மனது லேசாகி விடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:

"ஸாரி.. ஆக்சுவலி பல கோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்.." என்று பாலிஷாகச் சொல்கிறார்.  

அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். "இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்.." தயங்குகிறார்.

"பரவால்ல.. எதாக இருந்தாலும் சொல்லுங்க"...

"நான் அந்தக் கம்பெனில ஸ்டோர்ல வொர்க் பண்ற ஆளு தான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடி கூடத் தெரியாது"...

நிர்வாகி அதிர்ச்சியாகிறார். "அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?"....

"இந்தப் பையன் கிட்ட போய் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்வளவு தான்"...

"அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்க முடியும்?"....

"முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டு பிடிச்சதே அவன் தான்"

யாரையும் குறைவாக மதிப்பிடாதீர்கள்....

படித்ததில் பிடித்தது

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் - தென்கச்சி கோ சாமிநாதன்

*தென்கச்சி கோ சாமிநாதன்*

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.
.
ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.
.
“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’
.
“ஆமாங்க.’
.
“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து… ஒரு முக்கியமான விஷயம்.’
.
“சொல்லுங்க டாக்டர்.’
.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’
.
“எங்கே டாக்டர்?’
.
“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’
.
“பெரிய விபத்தா டாக்டர்?’
.
“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக்கிட்டி இருக்கிறவங்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’
.
“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.
.
“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்து இருக்கறவங்களுக்கு எல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா தான் அவங்களையெல்லாம் காப்பாத்திடலாம்.’
.
“சரி.’
.
“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்களை எல்லாம் பிழைச்சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என்னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’
.
“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’
.
வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.
.
“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’
.
அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல்கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.
.
“ஹலோ!’
.
“”சார்… மறுபடியும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’
.
“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’
.
“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’
.
“என்ன ஆச்சு டாக்டர்?’
.
“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’
.
மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.
“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
.
மறுநாள் மருத்துவமனைக்குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்களைப் பார்க்கிறார்கள். மொழி ஒரு தடையாக இல்லை.
.
ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”


இப்படி எல்லா ஊடகங்களும் இருந்திருந்தால் கொரானா இவ்வளவு வேகமாக பரவி இருக்காது. உயிரிழப்பும் இவ்வளவு ஏற்பட்டு இருக்காது. 

மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர.
மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை காவு வாங்கவும் இல்லை!

Tuesday 15 June 2021

படித்ததில் பிடித்தது - வாழ்க்கைத் துணை’ (life partner) என்றால்..?

இந்தக் கதையைப் படித்து விட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிகப் பொறுமையாகக் கதையைப் படித்து அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி!

மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்து கொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளைச் செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை எழுந்தது. ‘தனக்குரியவனைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டும், அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்க வேண்டும்’ என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, 

“அப்பா… அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவ வேண்டும் அப்பா” என்றாள்.

‘மகள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனைத் தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே… அது அதை விட சந்தோஷம்’ என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான்.

பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான்.

இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்குப் புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்து விடுங்கள்” என்றாள்.

பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான்.

தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலைக் குறிப்பிட்டான்.

அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், “அப்படியே செய்கிறேன் குருவே!” என்றான்.

அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?” என்று கேட்டான்.

சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்… அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் ஆஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத்தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்கள்.

விவரத்தை குறித்துக் கொண்டான் மன்னன்.

மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, “உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக் கொண்டு சவாரி செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்க முடியும்” என்று அறிவித்தான்.

இந்தப் போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறுவயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்குத் தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள்.

ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு போட்டிக்கு ஒப்புக் கொண்டாள்.

குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்ய வேண்டிய சிலவற்றைக் குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்ய வேண்டியதைப் பற்றியும் விவரிக்கப்பட்டது.

மகளை நோக்கி, “போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்க வேண்டும்” என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு ஏற்பாடானது.

முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையைச் சுற்றிச் சுற்றி வந்தான். குதிரையின் பிடரியைப் பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கி விட்டான். இளவரசியின் கையைப் பற்றி அணைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள்.

இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளைத் தட்டினான்… எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், “இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கி விட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக் கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான்.

“கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும் போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்க வேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி” என்றான் இளவரசியைப் பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.

மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றிக் கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்ய முடியும்” என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது.

நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றிக் கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்து விட்டது. உடனே “எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும்” என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்தக் குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்து விட்டான். ஓவியத்தில் தன் அழகைப் பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்து விட்டது.

கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தைப் பற்றி சொல்லப்பட்டது. குதிரையை சுற்றி வந்து தடவிக் கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக் கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக் கொண்டு எழுந்தான்.

நேரே இளவரசியிடம் சென்று “வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். “வேண்டாம்… எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்று விடுவீர்கள்….”

“பரவாயில்லை… அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளி விட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா..” என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக் கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு சமாதானமானது தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான்.

இளவரசி… “வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு… வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு” என்று அச்சத்தில் தயங்கினாள்.

“பயப்படாதே… நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்” என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் “வீல்” என்று அலறி விட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள்.

காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்று விட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள்.

அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி.
“எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்து விட்டாயா?”

“அப்பா… எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றி பெறவில்லை. ஒவ்வொருவரும் ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்.” என்றாள்.

“என்ன செய்யலாம்? நீயே சொல்…”

“எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்து விடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்”.

“சரியம்மா… உனக்குப் பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்.” என்றான்.

தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே… எப்படி தந்தை இவரைத் தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள்.

“என் முடிவை நீ ஏற்றுக் கொள்ளவில்லையா அம்மா?” என்றான் மகளை நோக்கிய அரசன்.

“இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்”.

அரசன் சொன்னான்… “முதலாவதாக வந்தவன் மிகச் சிறந்த குதிரையேற்ற வீரன். திறமைசாலி. ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ எதுவும் இல்லை”.

“இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது.”

“மூன்றாமவன் உன்னை சற்றுக் களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும் போது கூட உனக்கு அந்தக் களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்து விட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்!”

“நான்காம் நபர் மிகப் பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக்கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.”

“ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளைப் புரிந்து கொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதைப் போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக் கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!” என்றார்.

‘வாழ்க்கைத் துணை’ என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து கொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே ‘வாழ்க்கைத் துணை’ என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர்.

புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கோர்ட் படியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

Sunday 13 June 2021

வயதாகி கொண்டே போகிறது நாளை என்ன நடக்கும்...? எப்படி வாழ்க்கை செல்லும்..?

வயதாகி கொண்டே போகிறது




நாளை என்ன நடக்கும்...?

 எப்படி வாழ்க்கை செல்லும்..? 

இந்த கவலை இல்லாதவர்கள் யாரும் உண்டா நம்மில் ...?

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போவதில்லை. 

கடவுள் போர்டிங் பாஸ் கொடுத்தால், போக வேண்டியதுதான்.

அதுபோல போகும்,
போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. 

 ஆகவே கஞ்சத்தனமாக இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள்,

 மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

*உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!*

எதற்கும் கவலைப் படாதீர்கள். 

நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? 

வருவது வந்தே தீரும்! 

நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். 

அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

 நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், 

உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு
வந்துவிடும்.

 உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.  

*உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்*

 *அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.*

 அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

*இன்னும் இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அலையாதீர்கள்.*

*பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்*

*பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது*

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

 அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும்.

 ஆகவே ஓரளவு இருந்தால், 

இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும்.

 பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

*ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.*

 *பணம், புகழ்*,
*சமூக அந்தஸ்து* *என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்*

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள்.

 யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். 

அதை மனதில் வையுங்கள்.

 நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,

அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 

நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவிட்டுப் போகும். 

*மாறாக* *மகிழ்ச்சியில்லாமல் கழியும் ஒவ்வொரு* *நாளும் உங்கள்*
*ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிட்டுப் போகும்*

அதை மனதில் வையுங்கள்.

 மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். 

அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது!!!

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, 
சூரிய ஒளி, 
நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும்!!

 அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

*எல்லாவற்றிற்கும் மேலாக,

உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

உங்கள் குடும்பம் ,நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும்.

அவைகள்தான் (அவர்கள்தான்) உங்களை இளமையாகவும், அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்...!!

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்...!!!

Thursday 10 June 2021

ஒரு விரிசல் எங்கு தொடங்குகிறது...? படித்ததில் பிடித்தது

ஒரு விரிசல்
எங்கு தொடங்குகிறது...?

நீ நீயாகவே இருப்பதிலோ
நான் நானாகவே இருப்பதிலோ
யாரோ ஒருவருக்கு
சலிப்புகள் ஏற்படும்போது...

"எப்போதும் உன்னைப் பற்றிய
சிந்தனைதான்" என
பரஸ்பரம் ஒருவரையொருவர்
குற்றம்சாட்டிக் கொள்ளும்போது...

"எனக்காக நீ என்ன செய்தாய்?
இதுவரை செய்ததெல்லாம் போதும்"
என்ற வார்த்தைப் ப்ரயோகங்கள்
முன்னைக் காட்டிலும் அதிகமாகப்
பயன்படுத்தப்படும்போது...

எந்தத் திரையுமின்றி
எந்தத் தடங்கலுமின்றி
ஒருவர் கதைகளை இன்னொருவரிடம்
பகிர்தலில் சிறு தயக்கங்கள் வரும்போது...

உரிமையாய் செய்யும்
சில செயல்களில்
"ஏன் சொல்லவில்லை,
எப்படி இதைச் செய்யலாம்?"
எனப் புதிதாய் கேள்விகள் எழும்போது...

நொடிக்கொருமுறை
பொசுக் பொசுக்கென்று
கேட்ட மன்னிப்புகள்
கோடையில் காய்ந்த காவிரியாய்
வறண்டு போகும்போது...

நீள நீளமாய்
நீண்ட சம்பாஷைனைகள்
சட்டென குறைந்துபோய்
அடுத்து என்ன பேசுவதென
தயக்கங்கள் தோன்றும்போது...

உன் வலி
அவனுக்கு எரிச்சலையும்
அவன் வலி
உனக்கு சலிப்பையும்
உணர்த்தும் போது...

அடித்துப் பிடித்து எடுத்த
அலைபேசி அழைப்புகள்
கடந்த காலமாகிவிட
நிகழ்கால அழைப்புகள்
மெளன நிலைக்குத்
தள்ளி வைக்கப்படும்
கணங்களின் போது...

நல்லவைகள், பேரன்புகள்,
பெரு மகிழ்ச்சி தருணங்கள்
அனைத்தும் மறந்துபோய்
கொம்பு வைத்த சாத்தானின்
உருவத்தில் பரஸ்பர முகங்கள் தெரியும்போது...

-பிரபுசங்கர்.க

Wednesday 9 June 2021

படித்ததில் பிடித்தது - பெட்ரோல் கவிதை


குடிக்கக் குடிக்க
தாகத்தை கொடுத்துக்
கொண்டே இருக்கிறது
என்றாலும்...
இதன் மீதுள்ள போதை
குறையவே இல்லை.

இதன் தாய்வீடு
அரபு நாடுகள்தான்
ஆனாலும்...
செல்லும் இடமெல்லாம்
சிறப்பாக வாழ்ந்தே மடிகிறது.

இதை பூட்டியே வைப்பார்கள்
வெளியே தெரிந்தால்
காத்திருக்கும் காற்று
கள்ளத்தனமாக இதை
கடத்திக்கொண்டு போகும்.

காற்றை மென்மையாக
காதலிக்கும் இது...
நெருப்பின் பலவந்தத்தால்
தீக்குளித்து விடுகிறது.

வாகனங்களுக்கு
சக்தியை தரும் இது...
சாமானியனுக்குப்
பக்தியைத் தரும்.
ஆமாம்...
தினமும் இதன் தரிசனம்
பயணத்திற்குத் தேவை.

அன்றாடத் தேவைகளில்
இதுவும் ஒன்று...
ஏறிக்கொண்டே இருக்கும்
இதன் மதிப்பை குறைக்க
கூடிக் கொண்டே
இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அடங்காத பசியைப் போல
தொடராத தூக்கத்தைப் போல
முடங்காத இதன் பயணம்
காலத்தை விரட்டிக்கொண்டே
பயணங்கள் முடிவதில்லை என்றே பாதையை 
சுருட்டிக் கொண்டே செல்கிறது.

*"பெட்ரோல்"*

Friday 4 June 2021

உலகின் ஆகச்சிறந்த தற்சாற்புப் பொருளாதாரம்


ஒரு பனை ஓலைக் குடிசை...!!!
உள்ளே நான்கைந்து சட்டி பானை...

வெளியே ஒரு விசுவாசமான நாய்.

பால் கறக்கும் ஒரு பசுமாடு... 

இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...

இரண்டு மண்வெட்டி...

பத்து ஆடுகள்...

ஒரு சேவல்...

ஐந்து கோழி...+30 குஞ்சுகள்...

இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....

சுற்றிலும் பத்து தென்னை மரங்கள். 

தென்னை மரத்தடியில்
ஒரு முருங்கை மரத்தோடு,
ஒரு கருவேப்பிலை மரமும்...

பக்கத்தில் பத்து வாழைமரம்...!

அடுத்து ஒரு புளியமரம்...!!! 

பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்...!!!

விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச்செடிகளும்...

மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகளும்...!!!!!

மீதமுள்ள விளைநிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்...தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும்.
இவை மட்டுமே போதும்...

எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை நூறாண்டுகள் ஓர் பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.....

உலகின் ஆகச்சிறந்த
தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்....!!!

Wednesday 26 May 2021

வாய்ப்பு கிடைக்கும் போதே புண்ணியம் செய்யுங்கள்- படித்ததில் பிடித்தது

பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம்.
எவ்வளவு?.  
என்று கேட்டார்...

300-ரூபாய் ..

200-ரூபாய்க்கு வருமா ? 

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

ஆட்டோ பறந்தது...

அண்ணே இந்த வழியா போனா
நீங்கடிபன் எங்கே சாப்பிடுவிங்க...?

ரோட்டுக்கடைதான் சார் 

அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்  

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா...
அவரது நெற்றிமற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது 

வாங்க 

இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும்
பண்ணாது என்றார், 
ஆட்டோ டிரைவர்.

இட்லி, தோசை, புரோட்டா
என கட்டினோம்...

எவ்ளோம்மா ?.

60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை... சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா...

இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க...

சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்... 
அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட
விட்டுட்டு வர்ரீங்க?. 

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், 
வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்...
இல்லையா ?.

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ணா 

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே
இப்படியும் தேடலாம் 

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...

இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.

200-ரூபாய் போதும்''

என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கனம் மூச்சு நின்றது

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.

உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து  விடுங்கள்....

நம் உயிரின் பயணம் பலன் பெரும் 

படித்ததில்  மிகவும் பிடித்தது.

Tuesday 25 May 2021

கழுகை போல் நமக்கு நாமே தனித்திருப்போம்..! - படித்ததில் பிடித்தது


பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும்.

அதில் வென்றால், 

அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும். இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும். 

தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும்.
அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும். இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும். அப்போது அது ஒரு புதிதாய்ப் பிறந்த கழுகின் அளவுக்கு உருமாறியிருக்கும். எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும். நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து *ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில் சக்கரவா்த்தியாய் வலம் வரும்.

மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு.
கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது.

 தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும். தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல், புதிய வழிகளை உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.

கொரோனாவை வெல்வோம்..!