தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற் கான பலப்பரீட்சை இன்று சட்டப்பேரவையில் நடக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல் வரானார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வா னார். புதிய அமைச்சரவை அமைந்து 2 மாதங்கள் கழிந்த நிலையில், திடீரென பிப்ரவரி 5ம் தேதி, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக் கப்பட்டார். அவர் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக தற்போது 10 எம்எல்ஏக்கள் தலை மையை எதிர்த்து வெளியேறியுள் ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா சிறைக்கு சென்றார். அன்றே சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தங்களுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்க வாய்ப்பு கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். மாலையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. முன்னதாக, ஆட்சி அமைக்க அழைக்கும்போது, 15 நாட்களுக் குள் சட்டப்பேரவையில் அமைச்ச ரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், இன்று பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளார். பேரவை அரங்கில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையின் பெரும்பான் மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் இதுபோன்ற நிகழ்வு நடப்பது 3- வது முறையாகும். முதலில் 1952-54 காலகட்டத்தில் ராஜாஜி தமிழக முதல்வராக இருக்கும் போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின் எம்ஜிஆர் மறைவை அடுத்து 1988-ல் அரசு மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. தற்போது 3-வது முறை யாக இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடக்கிறது. பேரவை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப் பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளிப்பார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்து, அதன் மீது பேசுவார். தொடர்ந்து, தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வர் கோரியதும், பேரவைத்தலைவர் வாக்கெடுப்பு நடத்துவார். பொதுவாக பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால், தற்போது எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது. அதே நேரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், வாக் கெடுப்பு எந்த முறையில் நடத்தப் படும் என்பதையும், அதற்கான விதிகளையும் இன்று பேரவைத் தலைவர் பி.தனபால் பேரவையில் அறிவித்து, அதன்படி நடத்துவார். பேரவையில் அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்ப தற்கான வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரவை கூட்டத் தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அமைச்ச ரவைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக திமுக தெரிவித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை தற்போது 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 11 பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். மீதமுள்ள 123 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். தமிழக சட்டப்பேரவை யில் இப்போது 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் உடல் நிலை சரியில்லாததால் திமுக தலைவர் கருணாநிதியால் அவைக்கு வரமுடியாது. எனவே, பேரவைத்தலைவர் பி.தனபால் தவிர 231 எம்எல்ஏக்கள் வாக்கெடுப் பில் நேரடியாக பங்கேற்பார்கள். இதில், 117 எம்எல்ஏக்கள் ஆதரவு பெறும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை பலத்தை பெற்று தப்பிக்கும். இதனிடையே, கூவத்தூரில் தங்கியுள்ள தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் பேசி வருகின்றனர். எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பின்போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அதேநேரம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் எம்எல்ஏக்க ளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், பேரவை காவலர்கள் அதிக எண் ணிக்கையில் வரவழைக்கப்பட் டுள்ளனர். மேலும், வாக்கெடுப்பு எந்த முறையில் நடத்துவது என்றாலும் அதற்கான ஏற்பாடுகளை பேரவை செயலக பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||