t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 28.03.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்:பண்புடைமை

குறள் எண்:1000

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று.

பொருள்:
தீயவன் பெற்ற பெரும் செல்வம். பால் அது வைக்கப்பட்ட பரத்திரத்தின் கெடுதியால் கெடுதல் போலாகும்.

பழமொழி :
Borrowing is sorrowing.

கடன் துன்பத்திற்கு வழி வகுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே,உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனேன்றால் பொய் வாழவிடாது, உண்மை சாகவிடாது. ---விவேகானந்தர்

பொது அறிவு : 

   1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?            

விடை : நாக்கு.    

2.உலகிலேயே மிக நீளமான பழமையான கால்வாய் எது ?


 விடை : கிராண்ட் கால்வாய்( சீனா )
English words & meanings :

 Fever. - காய்ச்சல்,

Headache. - தலைவலி
வேளாண்மையும் வாழ்வும் : 

 பயன்பாட்டுக்குப் பின்னர் தண்ணீர்க் குழாய்களை நன்கு மூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

மார்ச் 28

மாக்சிம் கார்க்கி அவர்களின் பிறந்தநாள்


மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நீதிக்கதை

 முரசொலி 



ஒரு நரி பசியினால் இரை 

தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று 

அது பயந்தது. 

தன் பசி தீருமுன் தான் 

பிறிதொரு மிருகத்தின் பசிக்கு விருந்தாகிவிடக் கூடுமோ என்று கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. 

நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. 

இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, 'பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட் டேன்!' என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.

நீதி: கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே நன்று.

இன்றைய செய்திகள்

28.03.2025

* ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு.

* மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.

* ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது.

* பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை.

* அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

* சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

* சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* The high court ordered to provide pension money benefits immediately to the Government Transport Corporation.

* A separate resolution in Tamil Nadu Legislative Assembly regarding the matter on Vagbu

* In the Gulf of Mannar in Ramanathapuram, the Ram Sethu sand dunes which connects Sri Lanka and India connecting have also been found to be the largest reproductive site of the six rare seawater bird species.

* The Parliamentary Standing Committee recommends the immediate release of funds for the states who do not accept the BMSR scheme.

* The world countries have retaliated to the announcement of US President Donald Trump's announcement that the US imported vehicles and its major spare parts will be permanently charged.

* IPL in Chennai Metro trains will be operated till 1:00 pm, as the cricket match is being held today, Chennai Metro Rail Company said.

* The International Table Tennis Tournament started in Chennai yesterday.

Covai women ICT_போதிமரம்


27 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 27.03.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்: 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.

பொருள்:
எவருடனும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும்
இருளாகும்.

பழமொழி :
The swine do not know what heaven is

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை 

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

சதுரங்க விளையாட்டில் முன்யோசனை வெல்லுவதைப் போல ,வாழ்க்கையிலும் முன்யோசனை வெல்லுகிறது ! ---ஸெஸில்

பொது அறிவு : 

1. எந்த தேசத்தில் அதிக அளவு ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.?

விடை: ஜாம்பியா. 80% சதவீத பூக்கள்

2. ஒவ்வொரு வினாடிக்கும் எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின?.

விடை : 205 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அனுப்பப்படுகிறது.

English words & meanings :

 Exercise - உடற்பயிற்சி 
 
Face mask - முகக்கவசம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 உங்களின் நீர் உபயோகங்களை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எங்கு, எப்படி தண்ணீர் வீணாகிறது எனக் கண்டறிந்து அதைத் தடுக்க முடியும்.

மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  
உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.



யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

நீதிக்கதை

 ஆறும்‌ நீரும்‌ 



நல்ல வெயில்‌ காலம்‌. வழிப்போக்கர்‌ இருவர்‌ சாலை வழியாகச்‌ சென்று

கொண்டிருந்தார்கள்‌- 

நடைக்‌ களைப்பும்‌ வெயில்‌ கொதிப்பும்‌ அவர்‌ களுக்குத்‌ தண்ணீர்த்‌ தவிப்பை உண்டு பண்ணின. சுற்றிலும்‌ 

ஒரே பொட்டல்‌. அருகில்‌ வீடு வாசல்‌ தோப்புத்‌ துரவு ஒன்றும்‌ கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல்‌ திகைத்தார்கள்‌. 



திடீரென்று அவர்களில்‌ ஒருவர்‌ மகிழ்ச்சியோடு பேசினார்‌ “அண்ணா, இப்போதுதான்‌ நினைப்பு வருகிறது. வலதுகைப்‌ புறமாக கூப்பிடு தூரம் சென்றால்‌ அங்கே ஓர்‌ ஆறு இருக்கிறது. அங்கே சென்று தண்ணீர்‌ குடித்துக்‌ களைப்பாறியபின்‌ திரும்பலாம்‌”? என்று அவர்‌ கூறிய செய்தி இன்பம்‌ தந்தது. 



இருவரும்‌ சிறிது தூரம்‌ வலது புறமாகத்‌ நடந்தபின்‌,ஆற்று

மணல்‌ பரந்து கிடப்பதைக்‌ கண்டார்கள்‌. ஆற்றைக்‌ கண்டுவிட்ட குதூகலத்துடன்‌ கொதிக்கும்‌ மணற்சூட்டையும்‌ பொருட்படுத்தாமல்‌ விரைந்து நடந்தார்கள்‌.



ஆனால்‌ என்ன ஏமாற்றம்‌ ! அந்த ஆறு வற்றி வறண்டுபோய்க்‌ கிடந்தது. இக்கரையிலிருந்து அக்‌ கரைவரை எங்கும்‌ ஒரே மணல்வெளிதான்‌ கண்‌ணுக்குத்‌ தெரிந்தது. தூரத்தில்‌ கானல்தான்‌ தோன்றியது.



இருவரும்‌ மனமுடைந்து போனார்கள்‌. சிறிதுநேரத்தில்‌ தண்ணீர்‌ கிடைக்காவிட்டால்‌ மயங்கிச்‌சோர்ந்து விழ வேண்டியதுதான்,அவர்கள்‌ நம்பிக்கை இழந்து நின்றபோது ஆடு மேய்க்கும்‌ பையன்‌ ஒருவன்‌ அங்கே வந்தான்‌” ஆற்று மணலைத்‌ தோண்டினான்‌ இரண்டடி ஆழம்‌ தோண்டிய பின்‌ அடியிலிருந்து தண்ணீர்‌ ஊறி வந்தது. இரு கைகளாலும்‌ அள்ளிக்‌ குடித்து சென்றான்‌. அதைப்‌ பார்த்த வழிப்போக்கர்கள் தாங்கள்‌ நின்ற இடத்திலேயே மணலைத்‌ தோண்டினார்கள்‌. 



அங்கேயும்‌ அடியில்‌ நீர்‌ ஊறியது, அவர்கள்‌ தூய்மையான அந்த நீரைப்‌ பருகித்‌ போற்றிப்‌ புகழ்ந்து சென்‌றார்கள்‌, 



 நீதி : ஆற்றைப் போல் நல்ல குடியில் பிறந்த பெரியோர்கள், தாங்கள் துன்பமடைந்த காலத்தும் தங்களை நாடி வந்தோருக்கு நன்மையே செய்வார்கள்.

இன்றைய செய்திகள்

27.03.2025

* அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

* கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.

* டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

* வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Minister Rajagannappan said in the legislative session that there is a great demand for Aavin ghee in the United States.

* Rural Development Minister E. Periyasamy has announced that community health complexes will be built in rural areas at an estimated cost of Rs 3150 crore.

* It was reported in the Lok Sabha that 83,668 whatsup numbers and 3,962 Skype accounts have been crippled in connection with digital arrests.

* The US has announced that 25 per cent additional tax will be imposed on countries that import oil and gas from Venezuela.

* Miami Open tennis: Improvement of American player Taylor Britz quarterfinals.

Covai women ICT_போதிமரம்


26 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 26.03.2025




திருக்குறள்:

பால்:பொருட்பால்.   
   
இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:998

நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும்
 பண்புஆற்றார் ஆதல் கடை.

பொருள்:
நட்புக் கொள்ளாமல் தீமை செய்வாரிடத்தும் பண்புடன் பழகாமை இழிவாகும்.

பழமொழி :
சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.

A man is created by the environment

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

நீ வெற்றிக்காக போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள். ---கண்ணதாசன்

பொது அறிவு : 

1. ஆதார் கார்டு முதலில் எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டது? 

விடை: மகாராஷ்டிரா.       

2. பாம்பின் வாயில் எத்தனை பற்கள் உள்ளன?  

விடை : 200 பற்கள்

English words & meanings :

 Cough. - இருமல்

Diarrhea. - வயிற்றுப்போக்கு/ பேதி

வேளாண்மையும் வாழ்வும் : 

 குழாயில் நீர்க் கசிவு இருப்பின் பிளம்பரை அழைத்து வந்து உடனே சரி செய்யுங்கள்.

மார்ச் 26

லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள் 

லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven, /ˈlʊdvɪɡ væn ˈbeɪˌtoʊvən/ (About this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.
நீதிக்கதை

 பஞ்சவர்ணக் கிளிக்குஞ்சுகள்



மிகப் பெரிய பேரரசர் ஒருவருக்கு, சீன நாட்டு அறிஞர் ஒருவர் இரண்டு பஞ்சவர்ணக் கிளிக்குஞ்சுகளை பரிசளித்தார். பஞ்சவர்ணக் கிளியை, அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதுவர் என்பதால், பேரரசர் அகமகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, 

பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்றுஎன்று கட்டளையிட்டார்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தார் பேரரசர்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையைவிட்டு நகர மறுக்கிறது” என்று கூறினார் பயிற்சியாளர்.

உடனே பேரரசர், தனது நாட்டில் உள்ள புகழ்பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து, பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டார்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

“இதற்கு என்ன ஆயிற்று, ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? 

நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலைசெய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார் பேரரசர்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்து

கொண்டிருப்பதை பார்த்தார் பேரரசருக்கு ஒரே மகிழ்ச்சி.. 

“இந்த அற்புதத்தைச் செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றார்.

அந்த விவசாயி பேரரசர் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சிசெய்து தோற்றுவிட்ட நிலையில், நீ மட்டும் கிளியை எப்படி பறக்கச் செய்தாய்?” என பேரரசர்

பேரரசரை வணங்கியபடியே விவசாயி சொன்னார், “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்று சொன்னார்.

நீதி :இயற்கையும் சில சமயம் அந்த விவசாயி போல, நாம், 

நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடும். அது நமது நன்மைக்கே, நம் சக்தியை, ஆற்றலை, நாம் உணரவேண்டும் என்பதற்காகவே.

இன்றைய செய்திகள்

26.03.2025

* ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்க பயணிகளுக்கு சிறப்பு பரிசு: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.

* தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

* அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

* நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு.

* கேலோ இந்தியா பாரா விளையாட்டு: பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்தனர் ஜாண்டு குமார் மற்றும் சீமா ரானி.

* 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதிச் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி தகுதி.

Today's Headlines

* To encourage online booking reservation scheme, The Tamil Nadu State Transport Corporation has announced special lucky draw 

 * Toll Fees at 40 Toll Plazas in Tamil Nadu to be Increased from April 1st: National Highways Authority of India Announced.

 * Comprehensive Screening Centers to Detect All Types of Cancer to be Launched in All Districts of Tamil Nadu Within 10 Days: Minister Ma. Subramanian. This method is first in the Country.

 * India Urges at the United Nations that Pakistan Continues to Illegally Occupy the Jammu and Kashmir Region and Should Vacate it Immediately.

 * Earthquake in New Zealand: Recorded 6.7 on the Richter Scale.

 * Khelo India Para Games: Jaandu Kumar and Seema Rani Set National Records in Weightlifting.

 * 2026 World Cup Football: New Zealand Team Qualifies for the Qualifying Round.


25 March 2025

TRB ஆண்டு அட்டவணை வெளியீடு: முதுநிலை ஆசிரியா் தோ்வு ஆகஸ்டில் அறிவிப்பு


Annual Planner - 2025 Released by TRB!
TRB ஆண்டு அட்டவணை வெளியீடு: முதுநிலை ஆசிரியர் தேர்வு ஆகஸ்டில் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2025-ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகளின் அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்யும் அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.

நிகழாண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடா்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 4 அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவை; 5 மட்டுமே புதிய அறிவிப்புகள் ஆகும்.

அதன்படி, 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். 51 வட்டாரக் கல்வி அலுவலா்களை (பிஇஓ) நியமிப்பதற்கான தேர்வுக்கு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களும் பெரிதும் எதிா்பார்த்துக் கொண்டிருக்கும் டெட் தேர்வு குறித்து எந்த விதமான அறிவிப்பும் டிஆர்பி ஆண்டு அட்டவணையில் இடம்பெறவில்லை. எனவே, இந்த ஆண்டு டெட் தோ்வு நடத்தப்படாது.

ஆண்டுக்கு இரு முறை... தமிழகத்தில் இறுதியாக கடந்த 2023-ஆம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சிடெட் தகுதித் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2025




திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:997

அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்
 மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்:
அரம் போன்ற கூறிய அறிவுடையவராக இருந்தாலும் மனிதத் தன்மை
இல்லாதவர் மரத்திற்கு ஒப்பாவார்.

பழமொழி :
சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.

The spinning world makes every thing rotate.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது. ---காமராஜர்

பொது அறிவு : 

1. மண்பானையில் உள்ள நீரை குடித்தால் எவ்வகை நோய் குணமாகும்? 

விடை : இரத்த அழுத்தம்.          

2. உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்கு உள்ளது? 

விடை : சீனா 

English words & meanings :

 Blood pressure - இரத்த அழுத்தம

Blood test - இரத்த பரிசோதனை

வேளாண்மையும் வாழ்வும் : 

 * மறக்காமல் பயன்படுத்தியதும் குழாயை நிறுத்துங்கள்.

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.
நீதிக்கதை

 வானத்தில் வீடு 



அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், "என்னோட பண்ணையில் ஒரு வீடு கட்டணும் ,ஆனா அந்த வீடு தரையில் கட்ட கூடாது உன்னால் முடியுமா?"என்று கேட்டார்.



 பீர்பால்,அதற்கு நிறைய பணமும் ,மூன்று மாதம் அவகாசமும் வேண்டும், என்றார்.

,உடனே அக்பர் அவருக்கு ஆயிரம் தங்க நாணயங்களும் நேரமும் கொடுத்தார்



வீட்டிற்கு போன பீர்பால் 

வேட்டைகாரர்களிடம்,"எனக்கு 100 பச்சை கிளிகள் வேண்டும் அதை பிடித்துக் கொண்டு வாங்க" என்றார்.



உடனே எல்லா வேட்டைக்காரர்களும் காட்டுக்கு சென்று அதிக பச்சை கிளிகளை பிடித்துக் கொண்டு வந்தனர்.



அவற்றை தன்னுடைய மகளிடம் ஒப்படைத்த பீர்பால் ,இந்த கிளிகளுக்கு எல்லாம் பேச கற்றுக் கொடுக்க கூறினார்.



சிறிது நாட்கள் கழித்து, 

எல்லா கிளிகளும் பேச ஆரம்பித்தது.உடனே பீர்பால் கட்டடம் கட்டணும் ,கல் எடுத்துட்டு வாங்க என்று கட்டடம் கட்டும் போது பேசும் எல்லாம் வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க சொன்னார்.



மூன்று மாதம் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தாயிற்று வந்து பாருங்க என்று அக்பரை பண்ணைக்கு அழைத்து சென்றார் பீர்பால்.



அங்கு வந்து பார்த்தால் நிறைய கிளிகள் இருந்தன.அவை கட்டடம் கட்டணும் ,மண்ணைபோடுங்க ,

தண்ணீர் ஊற்றுங்க என்று பேசிக் கொண்டே இருந்தன.



இதைப் பார்த்த அக்பருக்கு ஆச்சர்யமாக இருந்தது. "என்ன பீர்பால் இந்த கிளிகளா எனக்கு வீடு கட்டி தர போகுது?" கேட்டார்.



அதற்கு பீர்பால், "ஆமாம் அரசே! காற்றில் வீடுகட்ட ,காற்றில் பறக்கும் பறவைகளால் தான் முடியும்," என்று கூறினார்.



தன்னை பீர்பால் தோற்கடித்து விட்டார் என்பதை புரிந்து கொண்டார் அரசர்.

இன்றைய செய்திகள்

25.03.2025

* ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி, 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

* ஒடிசாவில் தங்க படிமம் கண்டுபிடிப்பு: முதல் முறையாக படிமங்களை தோண்டி எடுக்க தங்க சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட உள்ளது.

* திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பார்முலா1 கார்பந்தயம்: 2-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்.

* மியாமி ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Construction of dams in 9 locations across 8 districts at a cost of ₹184.74 crore. Renovation, restoration, and reconstruction of 149 damaged irrigation systems in 35 districts announced byWater Resources Department Minister Duraimurugan

   * Government and private hospitals are instructed to investigate sudden deaths due to increased heat impact and report the details to the government.
 
   * Gold deposits discovered in Odisha: Gold mines will be auctioned for the first time for excavation.

   * The National Center for Seismology reported a 4.5 magnitude earthquake in Tibet.
 
   * Formula 1 car race: Australian driver Oscar Piastri topped the second round.

   * Miami Open Tennis: Serbian player Djokovic advanced to the 4th round.


24 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2025



திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:996

 பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்: அதுஇன்றேல்
 மண்புக்கு மாய்வது மன்.

பொருள்:
உலகம் பண்புடையார் ஒழுக்கத்தால் வாழ்கின்றது. அஃதில்லாவிடின்
அழிந்து போயிருக்கும்.

பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

கட்டளையிட விரும்புவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ---அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. நெடுஞ்சாலையில் அவசர அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைபேசி சாவடி எது?

 விடை:  SOS (save our souls).       

2.  VIVO நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?

 விடை: சீனா

English words & meanings :

 Backache.     -     முதுகுவலி

Blood.    -     இரத்தம்
வேளாண்மையும் வாழ்வும் : 

 உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீரை உபயோகியுங்கள்.

மார்ச் 24

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்
நீதிக்கதை

 யானையும் பலமும் 



ஒரு மிக பெரிய காட்டில் ஒரு பெரிய யானை வாழ்ந்து வந்தது.அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டில் வாழ்ந்து வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்தார்கள்.



யானை வர்ற பக்கம் கூட போகாமல் பயந்து,  அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாமல் செய்தன.



இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்தது.



தன்னோட பழகாம தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தன்னை எல்லாரும் உதாசீனப் படுத்துறது யானைக்கு வருத்தமாக இருந்தது.



ஒரு நாள் காட்டுக்குள் பெரிய மழை பெய்து திடீர் வெள்ளம் வர ஆரம்பித்தது.குட்டி குட்டி மிருகங்கள் வாழும் இடத்தை சுற்றி பெரிய ஆறு மாதிரி தண்ணீர் ஓட ஆரம்பித்தது. அதனால் தீவில்   எல்லா மிருகங்களும் உள்ளேயே மாட்டிக்கொண்டன.



வெளிய வந்து உணவு தேட முடியாத நிலை ஏற்பட்டது.

எல்லா மிருகங்களும் தங்களுடைய குட்டிகளுடன் பட்டினி கிடந்தன.



 அந்த பக்கம் வந்த யானை இதை எல்லாம் பார்த்தும் ,ரொம்ப நாளாக  தன்னோட வேலையை மட்டும் பார்த்து வந்த யானை ஒன்றும்  பேசாமல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது.





அப்போது,ஒரு குட்டி குரங்கு "யானை மாமா எங்க குடும்பமே பசியில் கிடக்கு எங்களுக்கு உதவ கூடாதான்னு"என்று கேட்டது.

அதை பார்த்து சிரித்த யானை "நான்தான் அரக்கன் மாதிரி இருக்கிறேன் என்னை பார்த்து பயமாக இல்லையா?" என்று கேட்டது. 



 அந்த குட்டி குரங்கு, "எங்க அப்பா அம்மா உங்கள் உருவத்தைப் பார்த்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வந்திடக் கூடாதுனு அப்படி சொல்லி வளர்த்தாங்க ,ஆனா ஒருத்தரோட உருவத்தை வைத்து அவர்களுடைய குணத்தை எடை போடக் கூடாதுனும் சொல்லி இருக்காங்க ,உங்களுடைய அமைதியான வாழ்க்கை முறையை பார்த்த எனக்கு நீங்க ஆபத்தானவர்னு தோன்றவில்லை" என்று கூறியது.



முதல் முறையாக ஒரு குட்டி மிருகம் தன்னிடம் பேசுவது யானைக்கு ரொம்ப சந்தோசம். உடனே தன்னோட துதிக்கையை கொண்டு எல்லா மிருகங்களையும் காப்பாற்றியது. 

 

அன்றிலிருந்து யானையையும் தங்களில் ஒருத்தராக நினைத்து பழக ஆரம்பித்தார்கள். அந்த குட்டி மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளையும் அந்த யானையுடன் விளையாட அனுமதித்தார்கள்,அதனால் ரொம்ப சந்தோசமாக வாழ ஆரம்பித்தது யானை.

இன்றைய செய்திகள்

24.03.2025

* தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் இன்று கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* லடாக் பகுதியில் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளதற்கு, தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

* கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு.

* தேசிய மகளிர் ஹாக்கி போட்டி: 4-வது நாள் ஆட்டத்தில் ஒடிசா, ஹரியானா, மிசோரம், மத்திய பிரதேசம் அணிகள் வெற்றி.

* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்க வீராங்கனை கோகோ காப்.

Today's Headlines

* Electricity board officials have stated that in Tamil Nadu, 'hybrid' power plants, combining wind and solar energy, will be established through public-private partnerships.

 * The Chennai Meteorological Department has forecast heavy rainfall in 8 districts of Tamil Nadu today, including Coimbatore and Erode.

 * India has expressed its opposition through diplomatic channels to China's illegal occupation of Ladakh and the creation of two districts, as stated by Minister of State for External Affairs Kirti Vardhan Singh in Parliament.

 * The US government has decided to deport 500,000 people from four countries, including Cuba.

 * National Women's Hockey Competition: Odisha, Haryana, Mizoram, and Madhya Pradesh teams won on the 4th day of the competition.

 * Miami Open Tennis Tournament: American player Coco Gauff advanced to the 4th round.
Covai women ICT_போதிமரம்


22 March 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.03.2025




திருக்குறள்:

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள்எண்:995

நகையுள்ளும் இன்னாத இகழ்ச்சி: பகையுள்ளும்
 பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.

பொருள்:
விளையாட்டிற்குங்கூட ஒருவரை இகழ்தல் கூடாது. பகைவரிடத்தும் பாராட்டும் குணமே பண்பாளரிடம் காணப்படும்.

பழமொழி :
Hear more talk less

கேட்பதற்கு தீவிரம் பேசுவதற்கு மந்தமாயும் இருக்க வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.

பொன்மொழி :

நான் மெதுவாக நடப்பவன் தான் ; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.---ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1. Flipkart நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது? 

விடை: அமெரிக்கா.     

2. மொபைல் போன் பேட்டரி எதனால் ஆனது? 

விடை : லித்தியம் அயன்

English words & meanings :

 Tailor. - தையல்காரர்

Teacher. - ஆசிரியர்
மார்ச் 22

உலக நீர் நாள் (World Water Day),

உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நீதிக்கதை

 புத்திசாலி பூனை

 ஒரு பூனை ஒரு பெரிய 

மரத்துக்கு கீழே நின்றுக்

கொண்டு இருந்தது.

அப்போது வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவில் கேட்டது. பூனை அதை உற்றுக் கேட்டது.

அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்தது.அந்த நரி பூனையிடம் , 

”வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்தால் எப்படி தப்பிப்பாய்? " என்று கேட்டது.

அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.இந்த மரத்தின் மீது 

ஏறி உச்சிக்குப் போய் தப்பிப்பேன். அவைகள் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” என்று பதில் கூறியது.

“நீ எப்படி தப்பிப்பாய்” என்று பூனை நரியிடம் திருப்பிக் கேட்டது.

அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” என்று பதில் கூறியது.

அப்போது வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால் பூனை மளமளவென்று மரத்தின்மேல் ஏறியது.

வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்து கொண்டன.கடைசி நேரத்தில் ஒன்றும் தோன்றாமல் நரி மாட்டிக் கொண்டது

பூனை நரியைப் பார்த்து, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லையா”என்று கேட்டது.

நீதி: முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை கஷ்டம்.

இன்றைய செய்திகள்

22.03.2025

* குடிநீர் கேன்களில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என, குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

* தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன என அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியுள்ளார்.

* ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

* அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

* தேசிய மகளிர் ஹாக்கி தொடர்: 2-வது நாளில் ஒடிசா, மணிப்பூர், அரியானா, ஜார்கண்ட் அணிகள் வெற்றி.

Today's Headlines

* Food Safety Department Officer Sathishkumar has advised drinking water manufacturing companies to refill water in drinking water cans only up to 30 times.

   * Minister M. Subramanian stated in the Legislative Assembly that snake and dog bite medications are available in all 2,286 government primary health centers in Tamil Nadu.

   * Express buses with features like cameras, SOS buttons, and modern fire suppression systems are expected to be in service by the end of April, according to Santhapriyan Kamaraj, founder of the Government Transport Enthusiasts Association.
 
   * The Cabinet Committee on Security has approved the purchase of modern artillery worth ₹7,000 crore for the military.
   
* President Donald Trump has signed documents to dismantle the US Department of Education.
 
* Swiss Open Badminton Tournament: India's Trisha-Gayatri pair advanced to the quarterfinals.
   
* National Women's Hockey Tournament: Odisha, Manipur, Haryana, and Jharkhand teams won on the 2nd day.


JOIN KALVICHUDAR CHANNEL